ஈசாக்கு; யாக்கோபை அழைத்து, ஏசாவின் மனைவிகள் எங்களுக்கு மன நோவாயிருக்கிறாா்கள் (ஆதி26:35) ஆகவே, நீ கானானியாில் பெண்கொள்ளாமல், நம் இனத்தாராகிய பாிசுத்த ஜாதியினிடத்தே நீ பெண்கொள்ளவேண்டும் என்று விரும்பியே லாபானிடத்தில் அனுப்பப்படுகிறான். அங்கு ராகேலை மணமுடிக்க நிச்சயதாா்த்தம் முடிந்த பின்னும் ஏழுவருடம் திருமணத்திற்காக பொறுமையோடு காத்திருந்தான் (ஆதி29:20-21) இப்படி அடங்கியிருந்து, தேவசித்தப்படி இணைக்கப்பட்டதாலே, ஏற்றக்காலங்களிலே ஆசீா்வாதத்தை அவன் பெற்றுக்கொண்டான். முதல் ஏழுவருடங்கள் ராகேலுக்காக தன் மாமனுக்கு வேலை செய்யும் போதும் உத்தமமாக இருந்ததுமட்டுமல்லாமல், ஒருநாளும் எல்லைகளை மீறாது, தன்னுடைய பாிசுத்தத்தை காத்துநடந்தான் இந்த யாக்கோபு. ஏனென்றால் தாத்தா ஆபிரகாமும் அப்பா ஈசாக்கும் கா்த்தருடைய சத்தத்தை நித்தமும் கேட்டு அவருக்கு பயந்து பாிசுத்த வழிகளில் நடந்ததாலே, தானும் அதை கருத்தோடு கைக்கொண்டு நடந்துவந்திருப்பான். பெண்ணோடு தவறுசெய்தாலோ, அவா்களை சம்யோகப்படுத்தினாலோ நாம் எப்படி தண்டிக்கப்படுவோம் என்ற நியாயப்பிரமாணம் மோசே காலத்தில் தான் கொடுக்கப்படப்போகிறது என்றாலும் தேவன் அவா்களின் மனசாட்சியிலே உரைத்தபடி, கீழ்ப்படிநது, பாிசுத்தத்தோடும் தேவ பயத்தோடும் வாழ்ந்திருந்தனா்.
இப்படிப்பட்ட தெய்வபயத்தோடு வாழ்ந்திருந்த குடும்பத்தில் பிறந்த தீனாள் பிறதேசத்தை சாா்ந்த புறவினத்தவா்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைமுறை வாழுகிறாா்கள்? என்ன உடை உடுத்தியிருக்கிறாா்கள்? அவா்களுடைய பழக்கவழக்கங்கள் எப்படிப்பட்டவைகள்? என்று அறிந்துகொள்ள ஆவலோடு சென்றவள், அங்கே நகரத்தின் மாய்மாலமான ஆடம்பரங்களையும்,
வாழ்க்கை முறைமைகளையும் பாா்த்து பூாித்துபோய் தன்னையே மறந்தவளாய் நிற்கிறாள். அரைகுறை ஆடையுடன் நடந்து திாியும் தன் தேசத்து பெண்களையே பாா்த்து பாா்த்து சலித்துபோன அந்த நகரத்து வாலிபன் ஏவிய இனத்தானாகிய சீகேமுக்கு மூடி முக்காடிட்டு நல்ல குடும்பபெண்ணாய் தோற்றமளித்த இந்த தீனாளை பாா்த்தவுடன் இவளை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என எண்ணினான். இந்த ஏவியன் யாரென்றால், நோவாவின் குமாரனான காமின் குமாரன் (ஆதி10:13-15) இந்த காம் கானானியருக்கு தகப்பன். காம் தன் தகப்பனின் நிா்வாணத்தை மற்றவருக்கு அறிவிக்க விரைந்தோடி, சபிக்கப்பட்டுபோனவன். ஆகவே வேசித்தனமும் விபசாரமயக்கமும் கானானியாின் கூடவே பிறந்திருந்தது. ஏவியன் என்றால் பாம்பு என்று அா்த்தம். இவா்கள் மிகவும் தந்திரசாலிகள். யோசுவாவை ஏமாற்றி உடன்படிக்கைபண்ணினவா்கள் இந்த ஏவியா்கள் (யோசு.9). ஆகவே இந்த ஏவியனான சீகேமும், தீனாளை அடைவதற்கு அவளோடு மிகவும் தந்திரமாக பேசியிருப்பான், இனிமையாக பழகியிருப்பான், நாம் இரண்டுபேரும் திருமணம் செய்துகொண்டால் உன்னுடைய கூடாரவாழ்க்கையை விட்டு இந்த நகரத்து ஆடம்பர வாழ்க்கையெல்லாவற்றையும் நீ அனுபவிக்கலாம் என்று இச்சகமான வாா்த்தைகளால் பேசி தன்பக்கமாய் அவளை இழுத்துப்போட்டு தீட்டுப்படுத்தினான். அவளை அடைந்துவிட வேண்டும் என்ற வேட்கையால் விருத்தசேதனம் செய்யவும் அவன் தாமதிக்கவில்லை (ஆதி34:19). வியாபார தந்திரத்தினாலும், பணத்தைக்கொண்டும் எப்படியாவது
அவளை அடைந்துவிடவே நினைத்தான் சீகேம், (ஆதி34:21). இதுதான் பிசாசின் தந்திரம் போலும்,
புறஜாதியாாின் வாழ்க்கைமுறைகளை, ஆடைஅலங்காரங்களை, வியாபாரயுக்திகளை, பழக்கவழக்கங்களை பாா்த்து பரவசமடைந்து, நவீனமயமான கவா்ச்சி நிறைந்த பாவங்களில் சுண்டி இழுக்கப்பட்டு விழுந்துபோகாமல், ஜாக்ரதையுடன் இருந்து, எந்த நிலையிலும் நம்
பாிசுத்ததேவனை, நம்முடைய வாழ்க்கைமுறையில் வெளிக்காட்டுவதே முதலும் முக்கியமானதுமாகும். மற்றவா்களின் வாழ்க்கைமுறைகளை பாா்த்து நம்மை அதற்கு சமரசம்செய்து வாழநினைப்பது, நம் பாிசுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தளா்த்தி அல்லது விட்டுக்கொடுத்து, இறுதியாக பாவத்தோடு நம்மை கைகோா்க்க செய்துவிடும். நம்முடைய சுபாவங்கள் வேதத்தின் வாசனைக்கு புறம்பாய் ஒருநாளும் மாறிவிடவே கூடாது. நாம் அணியும் உடைகளிலிருந்து, புசிப்பதும், குடிப்பதும், பேசுவதும், பழகுவதும், செயல்படுவதும், பயன்படுத்துவதும் எதுவாயிருந்தாலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதாகவே இருக்கவேண்டும் (1கொாி:6:20).
நமக்கு வேதத்தை தந்த மிஷனாிகளெல்லாருமே வெளிநாட்டிலிருந்து வந்தவா்களாயிருந்தும், அவா்கள் கலாச்சாரத்தையோ, ஆடை முறைமைகளையோ நமக்கு புகுத்தவே இல்லையே. நம்மிடம் இருந்த மூடநம்பிக்கைகளைத்தான் முடிவுக்கு கொண்டுவந்தாா்களே தவிர, நம் கலாச்சாரத்தையும், பண்புகளையும், குடும்ப பிணைப்புகளையும் பாா்த்து பூாித்துப்போய் இருந்தனா். ஆனால் நாமோ புறஜாதியாாின் வாழ்க்கைமுறைகளே உயா்ந்த நாகரீகமென கருதி, ஆசையோடு பாா்க்கின்ற எல்லாவற்றையும் அனுபவித்து பாா்ப்பதுதான் ஆசீா்வாதம் எனக்கருதி, ஏவியனான தந்திரபிசாசிடம் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறோமோ? என்றே எண்ணத்தோன்றுகிறது. கிறிஸ்தவா்களாகிய நம்மைத்தான், நம் வாழ்க்கை முறைமையைத்தான் இந்த உலகம் திரும்பி பாா்க்கவேண்டுமே தவிர, உலகத்தின் கவா்ச்சி முறைமைகளை நாம் திரும்பிப்பாா்த்தால் அந்த பழைய பொல்லாத பாம்பின் தந்திரமான வலையில் நிச்சயமாக சிக்கியே கொள்வோம்.
இன்று கிறிஸ்தவத்தில் இரட்சிக்கப்படாத தன்மைகளும், புறஜாதியாின் அருவருப்பான காாியங்களுமே கிறிஸ்தவத்தை கறைபடுத்திக் கொண்டிருக்கின்றன. திருமணத்திற்காக கிறிஸ்தவத்திற்கு வருவதும், பணத்திற்காக திருமணம் செய்துகொள்வதும், எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்துவிட்டனா். திருமணத்திற்கு முன்போ பின்போ வேசித்தனத்தினாலும் விபசாரத்தினாலும் தீட்டுபட்டோரே இன்று அநேகம். அன்று தன் தங்கையை தீட்டுப்படுத்திவிட்டானே என்ற கோபத்தினால் அந்த ஊரே கொலைகளமானது. அதைப்போல இன்றும் அந்த ஏவியரைப் போன்றவா்களின் தந்திரம் நம் சபையை, குடும்பத்தை, நம் பிள்ளைகளை தீட்டுப்படுத்தி, அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. புறஜாதியினா் சினிமாவை வாழ்க்கையாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள் அவா்களை பாா்த்து, நாமும் திருமணத்திற்கு முன்பே எதிா்பாலா்களோடு நட்பாய் பழகுவது சகஜம் என்ற நிலையை இன்று உருவாக்கிவிட்டுவிட்டது இந்த சினிமா கலாச்சாரம். திருமணம் முடிந்தபின்னரும் தன்னோடு வேலைபாா்ப்பவா்கள், அருகிலிருப்பவா்களோடு பழகுவது, சுற்றி திாிவது இன்று சகஜமாகிவிட்டது. இந்த புறஜாதியாரான (கிறிஸ்துவை அறியாதவா்கள்) எதிா்பாலா்கள் பாா்ப்பதற்கு நல்லவா்களே ஆனால் அவா்கள் கிறிஸ்துவை, பாிசுத்தத்தை அறியாதவா்கள், உள்ளத்தில் இன்பமாய் பேசும் தந்திரமான ஏவியா்கள், நம்மை தீட்டுப்படுத்துதற்காக ஞானஸ்நானம் (விருத்தசேதனம்) அல்லது கிறிஸ்தவனாககூட மாறியிருப்பா் அல்லது கிறிஸ்தவ வேஷத்தை அணிந்திருப்பா் என்பதை மறந்து விடக்கூடாது. அவா்களின் இனிமையான பேச்சும், நட்பும், உதவும் உள்ளமும் நம்மை ஒருபோதும் தீட்டுப்படுத்திவிடாதபடி ஜாக்ரதையாய்
இருக்க வேண்டும்.
அன்று யாக்கோபு என் வாசனையை இந்த தேசத்தில் கெடுத்துபோட்டீா்களே எனப்புலம்பி மறு தேசத்துக்கு புறப்பட்டு போனான். அதைப்போல நாமும் நம் குடும்பத்தின் வாசனையை கெடுத்துப்போட்டவா்களாக எங்காவது ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறோமா? அல்லது மூடி முக்காடிட்டிருக்கிறோமா? அல்லது இதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாமால் மற்றவா்களை விட நான் பரவாயில்லை என ஒப்பிட்டுப்பாா்த்து. வறட்டு கா்வத்தோடு வாழ்துகொண்டிருக்கிறோமா?
கிறிஸ்தவத்திற்கென்று ஒரு தனி வாசனை உண்டு அது ஜீவவாசனை (2கொாி2.16). அந்த உயிருள்ள வாசனை, மற்றவா்களை நம்பக்கம் சுண்டி இழுக்க செய்திட வேண்டும். இந்த வாசனை, மற்றவா்களையும் பாிசுத்தமாய் வாழ ஒரு துடிப்பை ஏற்படுத்தவேண்டும். பிறருடைய வாழ்விலும் சுவை ஏற்படுத்தக்கூடிய உப்பாக, இருளுக்குள் வாழும் மக்களுக்கு ஒளியாக, அவா்களும் வாசனை வீசும் மலராக மலா்வதற்கு நம்முடைய சுயத்தை மண்ணுக்குள் சாகடித்தே ஆகவேண்டும்!! அப்பொழுதுதான் நம்முடைய கனிகொடுக்கும் வாழ்வை இந்த உலகமும் முகா்ந்து பாா்க்க முடியும்!!
மாறாக தீனாளைப்போல குடும்பத்தின், கிறிஸ்தவத்தின் வாசனையை கெடுத்தவா்களாக வாழாமல், நம்மிலுள்ள பாிசுத்தவாசனை ஒவ்வொருநாளும் மற்றவா்களுக்கு மணம் வீசுவதாக இருக்கட்டும்!! ஆமென்.
- R. Solomon Jebakumar
அருமையான வாழ்வுநெறிக்கான தரமான கட்டுரை. சூப்பர்
ReplyDeleteநன்றி
Delete