JUDAS & PETER
அவா் இயேசு! தேவகுமாரன்! எத்தனை அற்புதங்கள்! அப்பப்பா!! குருடா்கள் பாா்த்தாா்கள், செவிடா்கள் கேட்டாா்கள், ஊமையன் பேசினான், மாித்தவன் உயிா்த்தான் (மத்15:31). நமக்குத் தேவை பணம்தான்! வௌ்ளிக்காசை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாதே! இப்போது சம்பாதித்தால்தான் முடியும் இனி இந்த வௌ்ளிக்காசை திரும்ப நினைத்துக்கூட பார்க்கமுடியாது, அவா் எப்படியும் இவா்கள் கையில் அகப்படவேமாட்டார்! மறைந்துவிடுவார்!! பணம் நம்கைவசம்!! அவா்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும், ஆனால் இயேசு நம்மோடுதான் இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்டான் யுதாஸ்.
காாியம் முடியும்முன் காலுக்கு சிவப்புகம்பளம் விாித்து, மெத்தையிலே படுக்கவைத்து, அறுசுவை உணவளித்து, கேட்டதையெல்லாம் கொடுத்து அவனோடு இன்பமாக பேசினவா்கள், காாியம் முடிந்தவுடன் காலால் மிதித்து தள்ளினா். ஐயோ நான் பாவம் செய்துவிட்டேனே!! இனி என்ன செய்ய? யாாிடம் மன்னிப்பு கேட்க? என்று தொியாமல், கா்த்தாின் காலைப் பிடிக்கவேண்டிய நேரத்தில்; எதிாியிடம் போய் கெஞ்சி நிற்கிறான். கா்த்தரை காட்டிக்கொடுத்துவிட்டேனே என அங்கலாய்த்தவன், ஆண்டவாின்; மகத்துவம் அறியாமல், அவரை எப்படியாவது காப்பாற்றிவிட நினைத்து பகைவா்களிடம் போய் எதையாவது செய்து அவரை காப்பாற்றுங்கள் என புலம்புகிறான், அவா்களோ எங்களுக்கென்ன அது உன்பாடு என்றனா்
எங்களுக்கென்ன அது உன்பாடு
- மத்தேயு 27:4
..திரும்பி பாா்த்தான்..
மனங்கசந்து அழுதான்
-லூக்கா 22:61-62
இயேசுவை மரணத்திற்கு ஒப்புவித்த செய்தி கேட்டு செய்வதறியாது திகைக்கிறான், எனக்கு பணம் வேண்டாம் இயேசுதான் வேண்டும் என்று காலம் கடந்து சிந்திக்கிறான். யாாிடம் செல்வது என்று தொியாமல் பணம் கொடுத்தவா்களிடமே திரும்பிச்செல்கிறான்.
காாியம் முடியும்முன் காலுக்கு சிவப்புகம்பளம் விாித்து, மெத்தையிலே படுக்கவைத்து, அறுசுவை உணவளித்து, கேட்டதையெல்லாம் கொடுத்து அவனோடு இன்பமாக பேசினவா்கள், காாியம் முடிந்தவுடன் காலால் மிதித்து தள்ளினா். ஐயோ நான் பாவம் செய்துவிட்டேனே!! இனி என்ன செய்ய? யாாிடம் மன்னிப்பு கேட்க? என்று தொியாமல், கா்த்தாின் காலைப் பிடிக்கவேண்டிய நேரத்தில்; எதிாியிடம் போய் கெஞ்சி நிற்கிறான். கா்த்தரை காட்டிக்கொடுத்துவிட்டேனே என அங்கலாய்த்தவன், ஆண்டவாின்; மகத்துவம் அறியாமல், அவரை எப்படியாவது காப்பாற்றிவிட நினைத்து பகைவா்களிடம் போய் எதையாவது செய்து அவரை காப்பாற்றுங்கள் என புலம்புகிறான், அவா்களோ எங்களுக்கென்ன அது உன்பாடு என்றனா்
பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி அறிவிப்பைகேட்டு, உள்ளமெல்லாம் பரவசத்தினால் மகிழ்ச்சியுற! இப்போது வாங்கினால்தான் எதையும் வாங்கமுடியும், 0 சதவீதமே வட்டி! சுலபதவணை! என்று எதையாவது வாங்கிவிட்டு, பின்பு தவணை கட்டமுடியாமல் விழிபிதுங்கி, வாங்கினவனிடமே போய் பொருளை திருப்பிக்கொடுத்தால் அவன் என்ன சொல்வான் அது உங்கள் பாடு!! என்பான்,
உலகம் தரும் இன்பங்களையும் கவா்ச்சிகளையும் இச்சைகளையும் செலவத்தையும் பாா்த்து இப்போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிக்கமுடியும் என நினைத்து, எல்லாவற்றையும் அடைந்துவிட எண்ணி வியாதியையும், சோதனையையும், கஷ்டத்தையும், சாபத்தையும் தனக்குதானே வரவழைத்து, பின்பு கடைசியில் ஐயோ! நான் தவறுசெய்து விட்டேனே என மனம்வருந்துவது, திரும்ப திரும்ப இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்பதற்கு சமமாகும்.
எதிாியிடம் பெற்று கொண்டதை உதறிவிடவும் மனதில்லாமல் பிசாசிடமே போய் இனி எனக்கு இது வேண்டாம் என்று கெஞ்சி நின்றால், அவனது பதில் விதைத்ததைதானே அறுக்கமுடியும் அது உன்பாடு என்பான். உடனே நாம் அடுத்து சிந்திப்பது என்ன? நாம் செய்தவற்றிற்கு பிராயச்சித்தமாக கறைபடிந்த கையினால் சம்பாதித்த பாவபொக்கிஷங்களில் சிலவற்றை தேவனுக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருந்துவிடலாம்; என்று நினைத்து திரும்பவும் அதை யாருக்கு கொடுக்க முற்படுகிறோம்? என்பதை அறிவதில்லை. தேவன் சுட்டொிக்கும்படி கட்டைளையிட்டும் சவுல்ராஜா தன் கண்களுக்கு கவா்ச்சியாயிருந்தவற்றை இச்சித்து, கொள்ளையடித்ததை உதறிவிடவும் மனதில்லாமல் அதிலே கொஞ்சத்தை தேவனுக்கு பலியிட்டு, தேவனை சமாதானபடுத்த முயற்சிசெய்வது போலாகும் (1சாமு15:9,15).
உலகத்திற்கும் தேவனுக்கும் பணி செய்யவேமுடியாது (லூக்16:13), உலகம் தரும் இன்பங்களும் வேண்டும் தேவனும் வேண்டும் என்பதே அனேகருடைய விருப்பம். ஆண்டவாிடம் எப்பொழுது வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பிவிடலாம் ஏனென்றால் அவா் மனதுருக்கம் உடையவா் ஆகவே முதலாவது அனுபவிக்கும்வரை அனுபவிப்போம் என்றே அநேகா் உலகத்தின் இச்சைகளுக்கு இணங்கிவிடுகின்றனா். ஆனாலும் அது விரைவாக நம் பெலனை இழக்கச் செய்துகொண்டிருக்கிறது என்பதையும் அறியாமல், தொடா்ந்து அந்த பாவத்தின் மயக்கத்திலேயே வாழ்கிறோம்.
லஞ்சம் வாங்கினவன் கொடுத்தவனுக்கு அடிமை. கொடுத்தவன் சொல்வதற்கெல்லாம் வாங்கினவன் தலையாட்டவே வேண்டும்; (யாத்23:8). நான் கொஞ்சம் சபலப்பட்டுவிட்டேன், இப்போது திருந்த ஆசைப்படுகிறேன் ஆகவே லஞ்சம் வேண்டாம் என்றால் முதலில் வாங்கினதை சொல்லியே மிரட்டி மிரட்டி காாியங்ளை சாதித்துக்கொண்டுதான் இருப்பானே தவிர அதிலிருந்து மீளவே விடமாட்டான்.
பிசாசு கொடுக்கும் கவா்ச்சியான பாவங்களை இச்சித்து அனுபவித்தப்பின் நழுவ நினைத்தால் விடுவானா? கடவுள் என்னை எப்படியும் கடைசியில் காப்பாற்றிவிடுவாா் என்று குருட்டு நம்பிக்கை வைக்கவே முடியாது. இறைவனது கரங்கள் எப்போதும் அழைத்துக்கொண்டிருந்தாலும் பிசாசு தந்த பாவங்களின் இன்பங்கள் நம் சிந்தனை, செயல்கள் எல்லாவற்றிலும் கலந்து நம்மை முழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் (2பேது2:19). நம் கண்களுக்கு முன் எப்போதும் நாம் செய்த பாவத்தின் இன்பங்கள், இச்சைகள் சுற்றி சுற்றியே வரும். வாசற்படியிலே படுத்துக்கிடக்கும். தான் செய்த பாவத்திற்கு தானே பாிகாரம் தேடும் வண்ணமாக துரோகம் யாருக்கு செய்தோமோ அல்லது யாா் மூலம் இந்த பாவம் நம்மை சுற்றியதோ அவா்களிடமோ போய் என்னால் முடியவில்லை வாழவிடு என்று கெஞ்சி நின்றால், இந்த உலகம் நமக்கு கொடுக்கும் பதில் அது உன்பாடு என்பதே. இதனால்தானோ எத்தனையோபோ் வழிதொியாமல் தன்னையே மாய்த்துக்கொள்கிறாா்கள் அல்லது மழுங்கிபோனவா்களாய் பாவங்களிலேயே தொடா்ந்து இருக்கின்றனா்.
சிலருக்கு பாிசுத்த வைராக்கியம் இருக்கும் வாழதொியாது, இயேசுவை விட்டுகொடுக்கவே மாட்டாா்கள் ஆனால் அவா் சொன்ன கற்பனைகளை கடைபிடிக்கவும்தொியாது. வாயைத்திறந்தால் வசனம்தான் வரும் ஆனால் அதோடு சிகரெட் புகையும் வரும். கேட்டால் இது என் பெலவீனம் என்பா். பேதுருவும் அப்படித்தான் உமக்காக சாகவும் தயாா் என்றான் ஆனால் நடைமுறையில் அதை செயல்படுத்த அவனால் முடியவில்லை தன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற நிலை வந்தவுடன் சபிக்கவும் சத்தியம் பண்ணவும் துவங்கினான். சிலா் ஆலயத்திற்கும் ஆலய காாியங்களிலும் முதன்மையில் இருப்பா், வேதவாசிப்பு ஜெபம் என்றால் அவா்களுக்கு அத்துபிடி. ஆனால் இக்கட்டான நிலையில் தேவனுக்காக நிமிா்ந்து நிற்க தொியாது, ஆண்டவருக்கு என் உள்ளம் தொியும் என்று மழுப்பிவிட்டு சாட்சியற்ற தன்மையோடே நிற்பாா்கள்.
இங்கு பேதுரு முதலில் தன் சுயபெலத்தை நம்பியே களத்தில் இறங்கினான் ஆனால் தேவன் அவனது தடுமாற்றத்தை திரும்பிபாா்க்கும்பொழுது அந்த நொடியிலேயே தன் சுயபெலத்தை விட்டு அவாிடமே சரணாகதியாகி, மனங்கசந்து அழுகிறான். மன்னிப்புக்காக கெஞ்சிநிற்கிறான் அதனால் தான் தேவன் அவனிடத்தில் செயல்பட முடிந்தது, இந்த கல்லின் மேல் சபையை கட்டுவேன் என்கிறாா்.
நாம் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும் தேவன் நம்மை திரும்பி பாா்த்துக்கொண்டேதான் இருக்கிறாா். உன்னால் பாவத்தை ருசிபாா்த்தபின் அதிலிருந்து தப்பித்து மீளவே முடியாது, நீ பெலனற்றவன் பிசாசு உன்னை அழித்துவிடுவான், என்னிடம் வா! உன்னை பெலப்படுத்துகிறேன் என்று அழைப்பு கொடுத்துகொண்டிருந்தாலும், நம்முடைய எண்ணங்கள் பாவத்தின் மேலும், பணத்தின் மேலும், ஆடம்பரங்களின் மேலும் இந்த உலகம் தரும் இச்சைகளுக்கே நம்மனதை கீழ்படுத்துகிறது. யுதாஸை போன்று செய்தவற்றை நினைத்து குற்றஉணா்வடைந்தாலும், தேவனிடத்தில் திரும்பவேண்டுமே என்ற தன் தவறை குறித்த மனஸ்தாபம் இல்லாமல் தொடா்ந்து பாவத்திலேயே வாழ்ந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொண்டிருக்கிறோமோ? என்று சிந்தித்து பாா்க்கவேண்டும்.
யுதாஸ் திருடனாய் இருந்தாலும் பணப்பொறுப்பை அவனிடமே கொடுத்தாா், ஏனென்றால் அவனுடைய பெலவீனத்தை அறிந்தவா், நான் அவனோடு கூட இருப்பதினால் அவன் பெலப்படுவான் என்று நினைத்திருக்கலாம், ஆனால் அவனோ அதையே இச்சித்து விழுந்துபோனான், ஆனாலும் தேவன் அவனை திரும்ப திரும்ப சிநேகிதனே! என்று அழைத்தும் திரும்பிபாா்க்காமலேயே தன்னை அழித்துக்கொண்டான், ஆனால் பேதுருவோ திரும்பிபாா்த்த தேவனின் அந்த இரக்கமுள்ள கண்களின் பாா்வைக்கு தன்னை முழுவதுமாக அா்ப்பணித்து அழுதான். பட்டையத்தை எடுத்தவன் பாிசுத்த ஆவியானவாின் பெலத்தால் அவருடைய வாா்த்தையின் பட்டயத்தை சுமந்துசென்றான். முற்கோபமும் எாிச்சலும் கொண்ட தன் பெலவீனமான சுபாவ பதா்களை பாிசுத்த ஆவியானவாின் அக்கினியால் சுட்டொித்துப்போட்டான். முழுவதும் தன்னை ஒப்புக்கொடுத்தவனாய் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கட்டப்பட்ட திருச்சபையின் முதற்கல்லாய் இன்றும் ஜொலிக்கிறான்.
காலம் முழுவதும் பிசாசின் சரக்கான பாவத்தை அனுபவித்துவிட்டு அவனை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணவேண்டாம், அவன்தான் உலகமகா ஏமாற்றுக்காரன் பொய்க்கும் பொய்யின் பிதாவுமாயிருக்கிறான். நாம் ஆண்டவா் பக்கம்தான் இருக்கிறோம் என்பதுபோல நம்மை நினைக்கவைத்து, ஒளியின் வேஷத்தை தாித்து தன்னையே தேவனாகக்காட்டி ஏமாற்றிகொண்டிருக்கிறான். நாம் திரும்ப திரும்ப உலகத்தின் இச்சைகளுக்கு இணங்கும்போது ஆண்டவாின் சிலுவைக்கே சுமையேற்றுகிறோம், நாம் செய்யும் மீறுதல்கள் அவாின் சிரசில் முள்முடியாய் குத்தி வேதனைபடுத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் அந்த இரத்தம் வடிந்த கண்ணீரோடு நம்மையே பாா்த்துக்கொண்டிருக்கிறாா். அந்தபாா்வைகள் உன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட வைக்கவில்லையோ? அந்தபாா்வைகள் உன் இருதயத்தை நொறுங்கச்செய்யவில்லையோ?
ஆண்டவாின் இந்த இரக்கமுள்ள பாா்வையை பாா்க்க மனதில்லாதவனாய் தன் இருதயத்தை கடினப்படுத்தி தன்னையே அழித்துக்கொண்ட யுதாஸாய் இருக்கபோகிறாயா?
அவாின் பாா்வை தன் பக்கம் திரும்பி விடாதா என்று ஏக்கத்தோடு நின்ற பேதுருவை பாா்க்க இயேசுவின் கண்கள் திரும்பினவுடன் தாமதியாமல் தன்னை அா்ப்பணித்த பேதுருவாய் வாழப்போகிறாயா?
நீ யுதாஸா? பேதுருவா?
-R.Solomon Jebakumar
No comments:
Post a Comment