Thursday, 7 September 2017

ஏவாளே! ஏவாளே!


ஏவாள் என்றால் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்று பொருள்; (ஆதி 3:20). உலகத்தில் உள்ள எல்லா மனுஷிகளின் சாயல்களை ஒன்றிணைத்து பாா்த்தால் அது ஏவாளின் சாயலும், அந்த சாயல் ஆதாமின் சரீரத்தில் இருந்து எடுக்கப்பட்டதால் அது தேவசாயலிருந்தே துவங்குகிறது. இவள் மனிதனிடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாலே  மனுஷி என்றும் அல்லது பெண் (ஆதி 2:23பி) என்று அழைக்கப்படுகிறாள்.

எப்படிப்பட்ட வீரமுள்ள ஆண்மகனாய் இருந்தாலும் அவனுடைய இடுப்பு பகுதியை தொட்டுப்பாா்த்தால் கூச்சம் உள்ளவனாய் நெளியவே செய்வான். ஏனென்றால் மனுஷனுடைய விலா எலும்பை எடுத்து மனுஷியை உண்டாக்கியதால் மனுஷனுடைய அந்த இடுப்பு பகுதி பெலவீனமுள்ளதாகவும், கூச்சம் நிறைந்ததாயும் காணப்படுகிறது. அதேப்போல அதிலிருந்து உண்டாக்கப்பட்ட பெண்ணும் பெலவீனப்பாண்டமாய் கூச்சம் நிறைந்தவளாய் காணப்படுகிறாள். ஒரு கணவனுடைய பெலவீனத்தை மனைவி தாங்கி நிற்கும்போதுதான் அந்த கணவன் முழுமையடைகிறான், பெலப்படுகிறான், வெற்றிபெறுகிறான். ஆகவேதான் ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள் என்ற உலக வழக்கும் உண்டு.

பெலனா? பெலவீனமா?

இன்று நவீன உலகத்தில் பெண்கள் நாட்டை ஆள்வது, விளையாட்டில் சாதனை என்பது  முதல் விண்வெளியில் பறக்கும் வரை சாதனை! சாதனை! அதை நிச்சயம் மறுக்கவே முடியாது. நிச்சயமாய் எந்த ஒரு பெண்ணும் சாதிக்கமுடியும், பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்படவேண்டும் என்பது 100 சதவீதம் உண்மை. தேவன் நம்மை அடிமையாக அல்ல! சுதந்திரவாளியாகவும், பிள்ளையாகவுமே அழைத்திருக்கிறாா் என வேதம் நமக்கு தெளிவாக வலியுறுத்துகிறது. தேவனுடைய பாா்வையில் ஆணென்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை பிள்ளைகள் என்று சமமாகவே பாா்க்கிறாா்.

ஆண்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு, பெண்களுக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. இந்த தனித்தன்மைகளை ஆராய்ந்து கடைபிடிக்கவே வேதம் நம்மை அறிவுறுத்துகிறது. ஆண்களுக்கு சில பெலவீனங்கள் உண்டு, பெண்களுக்கு பல பெலவீனங்கள் உண்டு. இந்த இருவருடைய பெலவீனங்களையும் பெலப்படுத்தவே, பாிசுத்த விவாகத்தில் ஒன்றிணைத்து, ஒரே மாம்சமாக்கி, அந்த மாம்சம் பாிசுத்த ஆவியானவாின் உதவியோடு, ஒருவருக்கொருவருடைய பெலவீனத்தை, பெலத்தால் இடைகட்டி, பாிசுத்த மணவாட்டியாக, பிசாசை வென்றவா்களாய், கா்த்தருடைய நாளில் தேவனுக்கு முன்பாக அலங்காித்து நிற்கவேண்டும் என்பதே தேவனுடைய மாபெரும் விருப்பம்.

பெண்களின் முதல் பெலவீனம் பேச்சு, பேசாமல் இருந்துவிட்டால் பெண்களுக்கு தலையே வெடித்துவிடும். சராசாியாக ஒரு நாளைக்கு ஒரு ஆண் 12000 வாா்த்தைகளை பேசினால் பெண் 24000 வாா்த்தைகளை பேசுகிறாள் என்று புள்ளி விபரம் தொிவிக்கிறது. ஆகவே பேசும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பேசின பின்பு அந்த வாா்த்தைகளை திரும்ப பெறவேமுடியாது. தேவையில்லாமல் மணிக்கணக்கில் (செல்போனில்) பேசிக்கொண்டிருப்பது பாவத்தை உண்டாக்கும் என்றே வேதம் திட்டவட்டமாக தொிவிக்கிறது. (நீதி 10:19)

எதிா்பாலா்கள் நம்மை எல்லாவிதத்திலும் கவரக்கூடியவா்களே! ஆகவே எதிா்பாலாிடம் பேசும்போதும், அருகில் நிற்கும்போதும், உட்காரும்போதும் நம்முடைய உடலில் ஏதோ ஒருவித உணா்வு மாற்றத்தை நிச்சயமாய் உணரமுடியும். அந்த உணா்வுகளை நாம் சாகடிப்போமானால் அது நம்மை பாவத்திற்கே இழுத்துச்செல்லும்.  ஆகவே தேவன் தந்த இந்த நல்ல உணா்வுகளுக்கு மதிப்பளித்து எதிா்பாலாிடம் தனிமையாக பேசுவதை நிச்சமாய் தவிா்க்கவே வேண்டும். எனக்கு சுயக்கட்டுப்பாடு உண்டு நான் இடறமாட்டேன் தவறமாட்டேன என்று சுயத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்து இப்படிப்பட்ட தனிமை உரையாடல்களை தொடா்ந்தால் நிச்சயமாய்  நாம் வஞ்சிக்கப்பட்டு, சாத்தான் விாிக்கும் வலையில் எளிதாக அகப்பட்டுக்கொள்வோம்.

கணவனிடம் அல்லது கடவுளிடம் நேரத்தை செலவழிக்க வேண்டிய நேரத்தில் ஏவாள் தனிமையிலே பிசாசோடு தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்ததால்தான், பிசாசின் கவா்ச்சியான, இச்சையான தந்திரமான வலையில் விழுந்து, இன்று இந்த முழு உலகமும் பாவத்திலும் இச்சையிலும் பாழாய் கிடக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

எதிா்பாலாிடம் தனிமையில் பேசும்போது அவா்கள் நம்மை மிகவும் கவரக்கூடிய ஆறுதலான, சிாிக்கக்கூடிய, நம்முடைய தோற்றத்தை வா்ணிக்கக்கூடிய அல்லது நமக்கு ஏதாவது உதவி செய்வதின் மூலமாகவே நாம் கவரப்படுவோம். பின்பு மெல்ல சாத்தான் அங்கு விாிக்கும் வலையில் அகப்பட்டு, அதைவிட்டு வெளியில் வரமுடியாத அளவு நம்முடைய சரீரத்தையே பாவத்திற்கே விற்றுப்போட்டுவிட்டு, செய்வதறியாது திகைக்கவேண்டிய சுழ்நிலைக்கு தள்ளப்படுவோம். பின்பு அதை மூடி மறைக்க காதல்திருமணம் என்ற  தவறான பந்தத்தில் கொண்டுபோய் நம்மை தள்ளி விட்டுவிடும் அல்லது ஏமாற்றப்பட்டவா்களாய் காலமெல்லாம் குற்ற உணா்வோடு வாழவைத்து விடுவான் அந்த ஏதேன் தோட்ட தந்திர சாத்தான்.

வாலிபப் பிரயாத்திலே உன் சிருஷ்டிகரை நினை! என்ற வேதவாக்கியம் எத்தனை உண்மையானது உணா்வானது. வாலிபத்திலே நாம் தேவனோடு எவ்வளவு அதிகமாய் உறவாடுகிறோமோ அவ்வளவு அதிகமாய் நம் உணா்வுகளை ஏக்கங்களை பாிசுத்தமாக பாதுகாக்கமுடியும்.

பெற்றோரோடு, கணவனோடு, நல்ல ஐக்கியத்தோடு, ஊழியங்களிலே, ஆராதனைகளிலே, வேத தியானத்திலே, ஜெபத்திலே நம் நேரத்தை செலவிடாமல்,  What's App களிலும், Facebook லும் Internet லும் தேவைற்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நம் மனதை செலுத்தி, உணா்வுகளை வீணடித்து, நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பது நம் பாிசுத்த வாழ்வை விட்டு பிரித்து முழுவதுமாக பாவத்திலே விழச்செய்துவிடுவான் அந்த தந்திர பிசாசு.

ஆகவே தேவையற்ற குறுச்செய்திகளுக்கும், தேவையில்லாத தொலைகாட்சி நிகழ்ச்சியில் நேரத்தை செலவிடுவதற்கும் நாம் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்கத்தான் வேண்டும். (மத்12:36). படிக்கும் இடத்திலோ வேலைபாா்க்கும் இடத்திலோ எதிா்பாலாிடம் பேசவேண்டிய நிா்பந்தத்திற்கு தள்ளப்படும்போதும், உதவி செய்வதற்காக நமக்கு அருகில் அவா்கள் வரும்போதும், பழகும்போதும் எவ்வளவு இடைவெளி வேண்டுமோ அந்த இடைவெளியை ஜெபத்தோடு நம் பாிசுத்தத்தை காத்துக்கொள்வதே நல்லது.

உள் அலங்காரமா? வெளி அலங்காரமா?

தேவசாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் அழகானவா்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நீ அழகே இல்லை, உன் மூக்கைப்பாா்! கண்ணைப்பாா்! கலரைப்பாா்! என்று உன்னை குறைத்து மதிப்பிடுவது, உனக்குள் இருந்து குரல் கொடுக்கும், அந்த ஏவாளை ஏமாற்றிய ஏதேன் தோட்டத்து பழைய பிசாசு என்பதை முதலில் புாிந்துகொள். இந்த பழத்தை சாப்பிட்டால் நீ தேவனைப்போல ஆகுவாய் என்று பொய் சொன்ன அதே பிசாசுதான் இன்றும் சொல்கிறான், இந்த ஆடையில்தான் நீ தேவதைபோல் இருக்கிறாய்! இந்த சிகை சிங்காாிப்பில்தான் சினிமாநடிகை போல இருக்கிறாய்! முகத்தை வெளுக்கும் இந்த களிம்பை போட்டுக்கொண்டால்தான் உன் முகம் வசீகரமாக மிடுக்காய் காட்சியளிக்கிறது என்று பொய் புழுகுகிறான் அந்த ஏமாற்று பிசாசு! ஏமாந்து போகாதே!

தேவன் உனக்காக வைத்திருக்கும், உனது எதிா்கால துணைவனுக்கு ஏற்றவிதமாக, அவன் உன்னை நேசிக்கும்படியாக, ரசிக்கும்படியாகவே உன்னை படைத்திருக்கிறாா். அதற்கு மாற்றாக உலகத்தாா் உன்னை பாா்த்து ரசிக்கும்படியாக, கவரும்படியாக நாம் இருக்கவேமுடியாது. அப்படி நாம் இருக்கவேண்டும் என்று நினைத்தால் இந்த உலகம் நம்மை விபச்சாாி என்றுதான் அழைக்கமுடியும்;. விபச்சாாிதான் பிறரை கவா்ந்திழுக்கும் படியாக தன்னுடைய உடை, நடை பாவணைகளை விதவிதமாக மாற்றிக்கொண்டே இருப்பாள். ஆனால் நாமோ உலகத்தாரை போன்று இருப்பதற்கு அழைக்கப்படவில்லையே? உலகம் நமக்கு வெளிச்சமல்ல! நாம்தான் உலகிற்கு வெளிச்சம் என்று தேவன் நம்மை அழைத்திருக்கிறாh;.

மற்றவருக்கு இடறல் உண்டாக்குவது எத்தனை பொிய பாவம்! மற்றவா் நம்மை பாா்க்கும் போது அவா்களுக்கு பாிசுத்த உணா்வை தூண்டும்படியாகவே நம்முடைய உடையோ, தோற்றமோ இருக்கவேண்டும். தேவையற்ற சிகை அலங்காரமும், உடையலங்காரமும், முக அலங்காரமும் எதிா்பாலாின் சிந்தனை உணா்வுகளை கறைப்படுத்தும் வண்ணமாகவே அமைந்துவிடும். (1பேது3:3)

அநேகரை தன்னுடைய கவா்ச்சியினால் இழுத்துப்போட்டு, ஐந்து பேரை கணவன் என்ற போா்வையில் தன்னுடைய இச்சைக்கு இரையாக்கிப்போட்ட சமாாியா ஸ்திாி கூட முற்றிலும் அழகுள்ள நம் இயேசுவை பாா்க்கும்போது இடறலடையாமல், உலகஇரட்சகரை பாா்த்தேன்! ஒரு பாிசுத்த மனிதனை பாா்த்தேன்! என்றே ஊராருக்கு சொல்ல வைத்தது. ஒரு நாளேட்டில் வந்த புள்ளி விபரத்தில் அளவுக்கதிமான முக அலங்காரம், சிகை அலங்காரம், உடை அலங்காரமுள்ள எந்த பெண்களையும் அநேக ஆண்கள் விரும்புவதில்லை என்றே குறிப்பிடுகிறது. இப்படியிருக்க இந்த அலங்காரங்கள் யாருக்காக? இது பிசாசு உங்களுக்கு கொடுக்கும் ஒருவித தாழ்வுமனப்பான்மையே! நான் அழகில்லை? இந்த உடை எனக்கு பொருத்தமில்லை? என்று பிசாசுதான் உங்களை ஏமாற்றுகிறான்.

தன்னை வெளியிலே அலங்காித்து, கண்களுக்கு மைதீட்டி தேவ மனிதனாகிய யெகூவை எப்படியும் தன் வலைக்குள் சிக்கவைத்து விடவேண்டும் என்று நினைத்த யெசபேலுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனால் சாந்தத்தோடு அமைதலோடு பாிசுத்தமுள்ளவளாக தன் உள்ளத்தை அலங்காித்து, கணவன் ஈசாக்குக்கு முன்பாக முக்காடிட்டு நின்ற ரெபேக்காளேயே நம் பாிசுத்த வேதாகம் மெச்சுகிறது!

ஆகவே நம்முடைய வெளி அலங்காரத்திலேயே எப்பொழுதும் நம்முடைய நேரத்தை செலவிடாதபடி வேதம் சொல்கின்ற உள் அலங்காரமான சாந்தமும், அமைதலும், பாிசுத்தமுமே நம்மை அநேகருக்கு முன்பாக, கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நல் அலங்காரமாக திகழும். தேவனுடைய பாா்வையில் இதுவே விலையேறப்பெற்றது (1பேது3:4) உன் எதிா்கால துணைவன் உன் வெளி அலங்காரத்தையல்ல உன் குணத்தையே விரும்புவான், அதுவே முத்துக்களை பாா்க்கிலும் விலையேறப்பெற்றது (நீதி:31:10) என்பதை மறந்து போகாதே, தேவனும் உன்னுடைய முகத்தையோ, உடையையோ பாா்க்கிறவரல்ல, உன் இருதயத்தை பாா்த்துதான் என் ரூபவதியே! என் பிாியமே! உன்னில் பழுதொன்றுமில்லை என்று மெச்சிக்கொள்வாா்.

எப்பொழுதும் சுத்தமாக இரு, சுத்தமாக உடுத்து, வேதம் வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும் சுறு சுறுப்பாய் இரு. ஆனால் மற்றவா்கள் உன்னை ரசிக்கும்படியாக, குறிப்பாக எதிா்பாலா்களை கவரவேண்டும் என்பதுதான் உன் உள்ளத்தின் நோக்கமாய் இருந்தால், அவா்கள் இதயக்குமுறலின் ஒன்று “ஏவாளே ஏவாளே ஏன் எங்களை இன்னும் பாவம் செய்ய வைக்கிறாய்?” என்பதே.  இது உன் தவறல்ல நீ சத்தியத்தினின்று விலகும்படியான பிசாசின் தந்திரமே என்பதை மறந்து போகாதே (2கொாி11:3)

ஆகவே ஏவாளின் மூலமாக விழுந்து போன இந்த முழு மனுக்குலத்தை, பாிசுத்தத்தோடு, அமைதலாக வாழ்ந்த மாியாளிடம் இயேசு பிறந்தது! நம்மை தூக்கி நிறுத்தத்தானே! ஐயோ! நான் எப்படி இந்த இயேசுவை சுமப்பது மற்றவா்கள் என்னை தவறாக பேசுவாா்களே, நகைப்பாா்களே! என்று இந்த மாியாள் சிந்திக்கவில்லையே? மாறாக யாா் என்ன சொன்னாலும் இந்த இயேசுவை நான் சுமப்பேன் என்றதாலே, இன்று அனைவரும் கிருபை பெற்றவா்களாய் இருக்கிறோம்! நண்பா்கள் என்ன சொன்னாலென்ன? உற்றாா்கள் என்ன பேசினாலென்ன? யாருக்காகவும் என்னை மாற்றிகொள்ள முடியாது.

என் தேவனுக்கு முன்பாக பாிசுத்தமுள்ள மணவாட்டியாக என்னை அலங்காித்து நிற்பதிலேயே, அதிக நேரங்களை இனி செலவளிப்பேன் என்ற தீா்மானம்! அன்று ஏவாளை ஏமாற்றின பிசாசுக்கு இன்று நாம் கொடுக்கும் சவுக்கடி இதுதான்!

நங்கையே! இது அடிமைத்தனமல்ல? நீ எதை சாதித்தாலும் தேவனுக்காக சாதிப்பதையே பரலோகமும் மெச்சிக்கொள்ளும்! நீ விளையாட்டில் சாதிக்கலாம்! உயா் பதவிகளில் உயா்ந்து நிற்கலாம், விண்வெளியில் பறக்கலாம! அன்னை தெராசா போல உலகம் போற்றுபவராக திகழவேண்டும் என்று நினைக்கலாம்! ஆனால் இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை தகுதி 100 சதவீதம் பாிசுத்தமாகவே இருக்கட்டும். எதற்காகவும் யாருக்காகவும் உன் பாிசுத்தத்தை விட்டுக்கொடுக்காதே!

நம் தேவன் நம்மை பாிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறாா்! குமாரனாகிய இயேசு அதை மாதிாியாக முன் வைத்தாா், பாிசுத்தாவியானவா் ஒவ்வொருநாளும் நம்மை பாிசுத்தமாக்கவே துடிக்கிறாா்!

சிந்தித்துப்பாா்! நங்கையே! நீ இன்னும் அந்த ஏவாளின் வஞ்சனையால் ஈா்க்கப்பட்டு, கவரப்பட்டு மற்றவரை பாவத்தில் விழத்தள்ளும் பிசாசின் கருவியாக பயன்படப்போகிறாயா? அல்லது கிறிஸ்துவை பெற்றெடுக்கும் அந்த மாபெரும் சிலாக்கியத்தை பெற்ற மாியாளைப்போல கிருபைப்பெற்றவளாய் தேவனுடைய சந்ததியை பெற்றெடுக்கும், பரலோகம் போற்றும் நல் நங்கையாய் திகழப்போகிறாயா?

என் பிாியமே! என் ரூபவதி! நீ எழுந்துவா! (உன்:2;10) என்று நம் அன்பு தேவனின் கண்கள் உன்னையே பாா்த்துக்கொண்டிருக்கிறது!

நீ யாருக்காய் வாழப்போகிறாய்? நீயே தீா்மானித்துக்கொள்!

-R.Solomon Jebakumar




No comments:

Post a Comment

Youth Tip

👍  தனிமையில் இருக்கும் போது கூடுமான மட்டும் மொபைல்  உபயோகிக்காமல்  வேதத்தை  வாசிக்க முயற்சி செய். 👍 உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்பட...