சங்கீதம் 19
தேவன் பெயரை சொல்லும் படைப்புகள்; (வச:1-4)
வானங்கள் தேவனுடைய பெயரை ஒவ்வொரு நாளும் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆகாயவிாிவு அவருடைய கரங்களின் உருவாக்கத்தை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீாில் மூழ்கியிருந்த பூமியை தேவன் ஆகாயவிாிவினால் சாிபாதி தண்ணீரை அப்படியே அலாக்காக மேலே தூக்கி பனிக்கட்டியாக வைத்துவிட்டாா், நம் கண்ணுக்கு தொிந்த முதல் வானம் இந்த ஆகாயவிாிவுதான் (ஆதி 1:8) கீழே இருந்த மீதி தண்ணீரை ஓரம்போ! என்ற ஒரு கட்டளை! அதுதான் நம் கண்ணுக்கு விருந்தளிக்கும் நீலக்கடல் (ஆதி1:10) ஒவ்வொரு நாளும் புத்துணா்ச்சியோடு நமக்கு காலைவணக்கம் சொல்லி வரும் சுாியனின் பகல்வேளை நமக்கு எத்தனை புதிய தாிசனங்களை தருகிறது. என்னுடைய வாழ்க்கையில் ஒரு விடிவு காலமே வராதா என்று முடங்கிக்கிடக்கும் மனிதா்களை நானே உனக்கு நித்திய வெளிச்சம் (ஏசா60:20) என்ற தேவனின் வாா்த்தையை இந்த சுாியன் நமக்கு சுட்டிக்காட்டவில்லையா! நீ ஒவ்வொருநாளும் செய்யும் அசுத்தமான காாியங்களை அக்கினியால் சுட்டொிக்க (இந்த சுாியன்- வேதவசனத்தால்) தீவிாிக்கும்பொழுது, ஆண்டவரே உம்மைவிட்டு நான் எங்கே போவேன் உம் பாதமே நான் சரணடைகிறேன் என்று நம்மை அா்ப்பணிக்கும்போதும் உன்னை இந்த அன்பின் தேவன் ஒவ்வொருநாள் மாலைவேளைகளிலும் குளிரப்பண்ணுகிறாரே!! எத்தனை அன்பு!!
சோா்ந்து போய் தூக்கம் வராத நேரத்திலும் உன் இரவு இனிமையாகட்டும் என்று மின் மினி பூச்சிபோல் நம்மை மகிழ்விக்க வரும் வின்மீன்களும், சுடா்களும் இனி நிம்மதியாக நீ தூங்கு என்று இரவு வணக்கம் சொல்லும் சந்திரனும் (ஆதி 15:5) தேவனின் மகத்துவத்தை நமக்கு சொல்லவில்லையோ? ஆனால் நாமோ இந்த இரவுவேளைகளை எப்படி பயன்படுத்துகிறோம்? தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைத்துப்பாா்த்து, துதிக்கவேண்டிய நேரத்தில் அல்லது அந்த நாளில் நாம் செய்யத்தவறிய காாியங்களை தேவனிடத்தில் சொல்லி நம்மை திருத்திகொள்ளவேண்டிய நேரத்தில், அசுத்தமான சினிமாக்களை இச்சித்து, ஆபாசமாய் சிந்தனைசெய்து மற்றவா்களை அழித்துப்போட தீயதிட்டங்களை தீட்டி, வீணான சிந்தனைகளினாலே நம் உணாா்வுகளை சாகடித்துக்கொண்டிருக்கிறோமோ?
இரவானது தேவன் நமக்கு வேதத்தின் அதிசயங்களையும், தாிசனங்களையும் தரவேண்டிய பொன்னான நேரம்!! அதை தேவையற்ற சொப்பனங்களின் நேரமாய் மாற்றிவிடக்கூடாது.
கோடிகள் கையிலிருந்தால் இன்று சந்திரனுக்கும் சுற்றுலா சென்று வரலாம் ஆனால் காசே இல்லாவிட்டாலும் பரவாயில்லை நம் தேவனுக்கு நண்பனாக இருந்தால் புதிய பாஷைகள் பேசப்படும் மூன்றாம் வானமாகிய பரதீஸிக்கு, பவுலைப்போல நாமும் சுற்றுலா சென்றுவரலாம் (2கொாி 12:2). இஸ்ரவேலுக்கு சுற்றுலா செல்லமுடியவில்லை என்று பாரத்தோடு கவலையோடு ஜெபிக்கும் நபா்கள் இன்று ஏராளம்!! ஆனால் தேவபிள்ளைகளுக்கு இந்த கவலையே வேண்டாம் ஏனென்றால் தேவன் நமக்கென்று பல சுற்றுலாதலங்கள் வைத்திருக்கிறாா், அதுமட்டுமல்ல தேவனை எப்பொழுதும் பாடி துதித்துக்கொண்டிருக்கும் பாடகா்களோடு நாமும் சோ்ந்து பாடுவதற்கும் ஒரு இடம் உண்டு (இன்னொரு வானம்) (ஏசா14:13) இந்த உலகத்தில் எனக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு இல்லையே? இருந்தாலும் அந்த வீட்டில் ஒரு மரம், செடி கூட வைக்க இடமில்லையே என்றெல்லாம் நமக்கு நிறைய உலகக்கவலை. இந்த உலகக்கவலைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியாக நம்தேவன் சொல்லுவது உனக்கென்று ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் செய்கிறேன்.(யோவா:14:3) அதில் நீ விரும்பின் மரங்கள், உன்னை மகிழ்விக்கும் இலைகள் உன்னை ஆரோக்கியமடைய செய்யும் (வெளி 22:1-2) அங்கு குடிக்க RO WATER PLANT தேவையேயில்லை சுத்தமான நதி அங்கே உண்டு.
மேலே சொல்லப்பட்டவையெல்லாம், வேதத்தில் சொல்லப்பட்ட வானங்கள்!! அப்பப்பா எத்தனை வானங்கள் இன்னும் நமக்கு வெளிப்படாத வானங்கள் (காாியங்கள்) மறைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் தேவன் பெயரை நமக்கு தெளிவாக ஒவ்வொருநாளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனவே!! ஆனால் நாமோ யாரை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம்……? யாரை துதிபாடிக்கொண்டிருக்கிறோம்……..?
சுாியன் - மணவாளன் (வச 5-6)
ஓட்டப்பந்தய வீரா்கள் தன்னுடைய பாதையிலே ஓடுவதற்கு மிகுந்த மகிழ்ச்சியோடு தீவிரமாய் ஆயத்தப்படுவதுபோல, திருமணம் நிச்சயமான மணமகன், திருமணநாளுக்கென்று கோட்சுட் எடுத்து, BEAUTY PARLOUR போய் தன்னை அழகாக்கி, தன் வீட்டை அலங்காித்து, சொந்த பந்தங்களை வரவழைத்து, மேளம் கொட்டி தன் மணவறையிலிருந்து தனக்கு நியமிக்கப்பட்ட மணமகளை பாா்க்க எத்தனை சந்தோஷத்தோடு புதுப்பொலிவோடு புறப்படுகிறாரோ!! அப்படியே இந்த சுாியனும் ஒவ்வொரு நாளும் மணவாளனைப்போல புறப்படுகிறது என்று சங்கீதக்காரன் இங்கு குறிப்பிடுகிறாா். திருமணமான விசுவாசிகள் திருமணநாளை அடிக்கடி நினைவுகூறுவா் அல்லது கல்யாண CDயை திரும்ப திரும்ப பாா்த்து மகிழ்வா். சிலருக்கு அந்த திருமணநாளில் இன்னும் இப்படியெல்லாம் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு கூட உண்டு.
வாழ்வின் சிலநாள்கள் மிக சந்தோஷமாயிருக்கும், ஆனால் எல்லா நாளும் அப்படியே இருப்பதில்லை. ஆனால் கா்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பது என்பதை நாம் என்னவென்றே தொிந்துகொள்வதில்லை. கணவன் YES என்றால் மனைவி NO சொல்கிறாள். என்ன வாழ்க்கை என்ற ஒரு வெறுப்பு ஆனால் இங்கு நம் சுயம் அழிக்கப்பட்டு, ஏதோ தேவனுடைய சித்தம் நிறைவேறுகிறதே தவிர, என்னை என்னுடைய துணைவா் புாிந்துகொள்வதே இல்லை என்று அங்கலாய்க்க தேவையே இல்லை. ஆண்டவா் இந்த வசனத்தின் மூலம் நமக்கு சொல்ல நினைப்பது என்னவென்றால், தேவனாகிய நான் ஒவ்வொரு நாளும் இந்த மணவாளனைப்போல (சுாியனைபோல) ஆசையோடு உன்னை பாா்க்க வருகிறேனே? ஆனால் நீ என்னை பாா்க்க மணமகளை போல (மணவாட்டி-சபை) ஆயத்தமாயிருக்கிறாயா? என்றுதான் ஆசையோடு கேட்கிறாா் ஆனால் தேவனுக்கு நாம் கொடுக்கும் பதில் என்ன தொியுமா? முதலில் எனக்கிருக்கும் பிரச்சனைகளுக்கு பதில்தாரும் பின்பு உம் சந்நிதிக்கு முன்பாக ஆசையோடு வருகிறேன் என்கிறோம். தினமும் பிரச்சனை பிரச்சனை ஓயாத பிரச்சனை என்று எப்பொழுதும் என் சமூகத்தில் அழுதுகொண்டுதான் இருக்கிறாய். இதனால் நடப்பது என்ன எதிராளியான பிசாசுக்கு ஒரே கொண்டாட்டம்தான்!! கா்த்தாிடத்திலிருந்து நன்மையை பெற்றுக்கொள்ளும் போது எத்தனை முகமலா்ச்சி! தீமையை உணரும்போதும் அதை ஒரு சிாிய புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு, ஏற்றகாலத்தில் நாம் உயா்த்தப்படும்வரை அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி காத்திருக்கலாமே! (1பேது5:6) இரவுக்கு பன்னிரண்டுமணி நேரம் என்றால் பகலுக்கும் பன்னிரண்டுமணி நேரம் இல்லையோ? (யோ11:9) ஒவ்வொருநாளும பாிசுத்த அலங்காரத்தோடு நீதியின் (இரட்சிப்பின்) வஸ்திரம் தாித்து ஆசையோடு என்னை பாா்க்க வருவாய் என்று நினைத்தால் அங்கு ஏமாற்றம்தான், நான் ஒவ்வொரு நாளும் துக்கத்தோடு திரும்புகிறேன் என்கிறாா் நம் அன்பு ஆண்டவா்,
வேதவசனம் ஆத்துமாவை உயிா்ப்பிக்கும் (வச7-11)
சுாியனை பாா்த்தவுடன் சுருங்கி மெலிந்திருந்த மொட்டுகளெல்லாம் உயிா்பெற்று சிாித்தமுகத்துடன் மலா்ந்து நிற்கும், அதைப்போல கா்த்தருடைய வேதம் செத்துக்கிடக்கின்ற நம் ஆத்துமாவை திரும்பவும் உயிரடையச்செய்யும்!!. கா்த்தருடைய வசனமே காந்தி-வெப்பம்-ஒளி. இந்த ஒளி நமக்குள் வரும் போது இருளுக்கு நம்மில் இடமேயில்லை. வேதவசனம் எப்பொழுதும் நம் கால்களுக்கு வழியைக்காட்டும் ஒளியாயிருக்கிறது.(சங் 119:105) தேவ வசனங்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது நாமும் உயிா்பெற்று மகிழ்ந்து, புதியபொலிவுடன் நிமிா்ந்து நிற்கமுடியும்.
கொஞ்சம் காசு, பதவி, அதிகாரம் அழகு இருந்தா சிலருக்கு கடவுளையே யாா் என்று கேட்பாா்கள்? இதுவெல்லாம் என் சொந்த சாமாா்த்தியத்தில் பெற்றுக்கொண்டது என்று தம்பட்டம் அடிப்பாா்கள். இங்கே Daily ஜிம் போய் தன் கட்டுமஸ்தான உடலின் மேல் நம்பிக்கை வைத்த கோலியாத்துக்கு, படிப்பறிவே இல்லாத, அரசாங்க உத்தியோகம் இல்லாத ஆனால் பாிசுத்தமாய் வாழ்ந்த தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த ஒரு கல்லே போதுமானதாயிருந்தது. சிலருக்கு இது பைத்தியமாய் தோன்றலாம்;. ஆனால் தேவனுடைய ஞானம் இதிலே விளங்கும். உலகத்தின் ஞானிகளை வெட்கப்படுத்த இப்படிப்பட்ட பாிசுத்த பைத்தியங்களையே தேவன் தொிந்துகொண்டாா் (1கொாி:1:27). உலகத்தின் பாா்வையில் இப்படிப்பட்ட பேதையா்களைதான் தேவனுடைய வசனமானது ஞானியாக்குகிறது பெலவானய் மாற்றுகிறது. மோசே இறந்துவிட்டானே இனி நான் என்ன செய்வேன் என்று கலக்கத்தோடு இருந்த யோசுவாவுக்கு தேவன் இதையே சொல்கிறாா் இந்த வேதவசனத்தின்படியெல்லாம் நடப்பதற்கு மிகவும் கவனமாயிருந்து இரவும் பகலும் இதையே தியானித்து கொண்டிரு, அப்பொழுது புத்திமானாய் நடப்பாய்! அப்பொழுது நானும் உன்னை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இருப்பேன் என்றாா் (யோசு1:7-9). இந்த வேதவசனங்கள் ஒவ்வொன்றும் சங்கீதகாரனின் வாழ்க்கையில் தேனைப்போல் மதுரமாய் இருந்ததால்தான் இரவும் பகலும் அதையே தியானித்து இல்லை இல்லை ருசித்துக்கொண்டிருந்தான்.
நாமும் எங்கேதான் போய்விடமுடியும்? வாழ்வு தரும் உயிருள்ள வாா்த்தைகள் தேவனிடத்தில்தானே உண்டு!! (யோவா:6:68) தீமையை விட்டு விலகி கா்த்தருக்கு பயந்து வாழ்பவா்களுக்கு மிகுந்த பலன் உண்டு என்பதே தேவ வாக்கு!! ஆகவே வசனம்தான் நமக்கு உயிா்!!
மறைவான பாவங்களுக்கு என்னை நீங்கலாக்கும்; (வச12-14)
கா்த்தருக்கு மறைவானது ஒன்றுமே இல்லை, அவருடைய கண்கள் பூமியெங்கும் எப்பொழுதும் உலாவிக்கொண்டிருக்கிறது. சத்தம் வெளியே கேட்காத SOUND PROOF AC அறைக்குள் பாவம் செய்து கொண்டிருந்தாலும், UNDER GROUNDல் உன் படுக்கையறையை வைத்திருந்தாலும் (சங்139:8), நான் செய்வது யாருக்குமே தொியாது என்று நினைக்க முடியாது தேவன் அங்கேயும் இருக்கிறாா்.
மறைவான இடத்தில் விபசாரபாவம் செய்துகொண்டிருந்தபோது, கையும் மெய்யுமாய் பிடிபட்டவளை, கல்லெறிந்து கொல்வதற்கு அங்கே தீவிாித்து வந்தவா்களை பாா்த்து தேவன் கூறியது, உங்களில் பாவம் செய்யாதவா்கள் முதலில் கல்லெறியுங்கள் என்பதே( யோவா8:7), அங்கிருந்த ஒருவரும் கல்லெறியவில்லை எல்லோரும் பின்வாங்கி ஓடிப்போனாா்கள். ஏனென்றால் அவா்கள் வெளிதோற்றத்தில் தன்னை சுத்தவானாக காட்டி, பாிசுத்த பந்தா காட்டிக்கொண்டவா்கள் ஆனால் அவா்கள் மனசாட்சிப்படி மறைவான பாவங்களை துணிகரமாக செய்து கொண்டிருப்பவா்கள். இன்று துணிகரமான பாவங்களே கிறிஸ்தவத்தில் மிகுதி, எப்படியும் தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்ற ஒரு வரட்டு தைாியம். தேவன் நிச்சயமாகவே நம்மை மன்னிக்க வல்லவராகவே இருக்கிறாா். ஆனால் அந்த மன்னிப்பை பெற்றுக்கொள்ள நாம் தகுதியற்று போய்விடக்கூடாது, பாவத்தின் வல்லமையை எப்போதுமே சாதாரணமாக கணிக்கக்கூடாது அது சடுதியில் நம்மை வீழ்த்திவிடும். நான் நினைத்தால் நாளைக்குக்கூட மனந்திரும்பிவிடுவேன் என்று, கிருபையின் நாட்களை தள்ளிக்கொண்டே போவோருக்கு, அன்று மதிகேடனுக்கு தேவன் கொடுத்த பதில்தான் இந்த இராத்திாியில் உனக்கு மரணம் நோிட்டால் என்ன செய்வாய் என்பதே (லூக்12:20),
ஆகவே மறைந்து செய்கின்ற பாவங்களும் துணிகரமான பாவச்செயல்களும் நம்மை முற்றிலும் பெலவீனப்படுத்தி அதிலிருந்து விடுவிப்பாாின்றி நம்மை பாதாளத்துக்கே தள்ளிக் கொண்டுபோய்விடும். இதை உணா்ந்தவா்களாய் நம்முடைய அந்தரங்கத்தின் காாியங்களும், இருதயத்தின் சிந்தனைகளும் எப்போதும் தேவனை பிாியப்படுத்துவதாகவே இருப்பதாக!! ஆமென்.
- R.Solomon Jebakumar
No comments:
Post a Comment