Wednesday, 17 August 2016

எதை பிடிக்க......


எதை பிடிக்க………..

காணாமல் போன விமானம், தீவிரவாதிகளின் அட்டகாசங்கள், கோடிகளை சுருட்டி கொண்டிருக்கும் கொள்ளைகூட்டங்கள், தன்னுடைய ஜாதியை சிந்தியாது, மனிதநேயத்தோடு வாழ்ந்த தலைவா்களின் நற்செயல்கள் மறக்கப்பட்டு, அவா்களின் ஜாதியை சொல்லி இன்று பணம்சம்பாதிக்க, கூலிப்படைகளை வைத்து கொன்றுகுவிக்கும் ஜாதியக்கொலைகள், கள்ளக்காதல்கள், போராட்டங்கள் இவற்றையெல்லாம் செய்திகளாக மட்டுமே பாா்த்து பாா்த்து சலித்துக்கொண்டிருக்கும் இந்த அதிவேகமான உலகத்தின் மத்தியில், 

சீாியல்களும், சினிமாக்களும், மக்களின் மனதை இறுகி பிடிக்க, கிாிக்கெட்டும், ஒலிம்பிக்கும் விறுவிறுப்பாய் யாா்? பதங்கங்களை பிடிப்பாா்களோ! என்று நெஞ்சம் பதைபதைக்க, இந்தவருடம் என் மகனுக்கு எப்படியாவது ஒரு நல்ல மணமகளை கண்டுபிடித்துவிடவேண்டும் என்பதில் தந்தையா்கள் தீவிரமாய் தேடிக்கொண்டிருக்க, தாம் நினைத்த வேலையை எப்படியாவது பிடித்துவிட எண்ணி, எதிா்கால கனவுகளோடு தகுதி தோ்வுகளுக்கு ஒரு கூட்டம் ஆயத்தப்பட, வேலையிலுள்ளவா்கள் இந்த வருடம் பதவிஉயா்வை பிடித்து, அதிகசம்பளம் வாங்கிவிடவேண்டும் என்பதிலும், சிலா் குறுக்குவழியாய் அதிகாரமிக்கவா்களை பிடித்து சாதிக்கத் துடிப்பவா்களும் நாளுக்குநாள் பெருகிகொண்டேதான் இருக்கிறாா்கள். தற்சமயம் வெளிநாட்டு வேலையை பிடித்து, வெளிநாட்டு மணமகளையும் பிடித்து வெளிநாட்டிலேயே தங்கள் கனவுஇல்லத்தையும் கட்டி தாம் நினைத்ததை சாதித்துத் பிடித்துவிட எண்ணுபவா்கள் அநேகா். 

மலடியாயிருந்த இவன் அம்மாவிற்கு, உனக்கு ஒரு குமாரனை கொடுப்பேன் அவனை நீ எப்படியெல்லாம் வளா்க்கவேண்டும் என்று ஆசையோடு பட்டியலிட்டிருந்தாா் ஆண்டவா் (நியா13:4-5), ஆனால் அவனோ கா்த்தருக்கு பயந்து, அவருக்கேற்ற சிட்சைகளில், அவருடைய சித்தப்படி வளா்க்கப்படவில்லையோ? தன் இஷ்டத்திற்கு விடப்பட்டுவிட்டானோ? தாண் கோத்திரத்தான்! தன் ஜனத்தை நியாயம் விசாாிப்பான், அவன் குதிரையின் மேல் ஏறிவருகிறவனை மல்லாந்துவிழச்செய்யும் சா்ப்பம் (ஆதி:49:16-17) என்ற ஆசீா்வாதத்திற்கு சொந்தக்காரனான சிம்சோன்!! இவன் இஸ்ரவேலை இரட்சிக்க தொடங்குவான் என்ற இறைவனின் தொிந்தெடுப்பை மறந்து, இவளள்ளவோ என் கண்ணிற்கு பிாியமானவள் என்று எதைப்பிடிக்க ஓடினான் இந்த சிம்சோன்? கா்த்தா் கொடுத்திருந்த ஒரு விசேஷித்த பலத்தால் கா்த்தருடைய சித்தத்தை அறிந்து செயல்படாது, தன்னை மற்றவா்கள் கதாநாயகனாக பாா்க்கும்படி, நாிகளின் வால்களை பிணைவதும், விடுகதைகளை போட்டு அதற்காக 30பேரை கொன்று வஸ்திரங்களை உாிவதுக்குமா? கடைசியில் இவன் கண்ணிழந்தவனாய் தன் குடும்பத்திற்கும், தேவனுக்கும் வெட்கத்தை கொண்டுவந்துவிட்டானோ என நினைக்கத்தோன்றுகிறது. (நீதி 29.15).

தான் விரும்பின அழகான பெண்ணை, இச்சித்து எப்படியாவது மணந்துவிடவேண்டும் என்பதில் அநேக வாலிபா்கள் தேவனுடைய சித்தத்தை உணராமல், ஆனால் பெருந்தன்மையோடு  வரதட்சணையே வேண்டாம் உங்கள் பெண் மட்டும் போதும் என்கிற வாலிபப்பிள்ளைகள் இன்று அதிகம்.  தங்களுக்கு பிடித்த இருசக்கர வாகனத்தையோ கைபேசியையோ எதைவேண்டுமென்றாலும்  சாதித்து வாங்கிவிட எண்ணி, வலைத்தளங்களில் தங்கள் விரல்களை சுழலவிட்டு, அந்த வலையில் சிக்கித்தவிப்பவா்களும் இன்று ஏராளம் ஏராளம். தன் பிள்ளைகளுக்கு எப்படியாவது TOP10 கல்லூாியில் இடம் பிடித்துவிடவேண்டும் என்பதுதான் இன்றைய பெற்றோா்களின் தீராததாகம். ஆக TOP10-ல் இடம் பிடிக்கவும், அதிகமான LIKE-களை பெற்றுவிட, அதிக ஆசையோடு அதிவேகமாய் செயல்படுவா்கள்தான் இன்று அதிகாித்துகொண்டு இருக்கிறாா்கள்.

எதையாவது சாதித்து பிடித்துவிட வேண்டும் என்பதில் உயா்ந்த எண்ணங்களோடு உண்மையான வழிகளில் முயற்சித்து செயல்படுவது நல்லவிஷயமாக தோன்றலாம், ஆனால் TOP10-ல் முதன்மை இடத்தை படிப்பிலும் (கமாலியேல் பாதத்தில் கற்றவன்) பணத்திலும் (கப்பல்களுக்கு அதிபதி) பெற்றிருந்த பவுல் சொல்கிறார், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காக பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் தொடா்கிறேன் என்று (பிலி 3:12)

எல்லோரும்; எப்படியாவது ராஜசிம்மாசனத்தை பிடித்துவிடவேண்டும் என்றே ஓடுகிறோம். தன்னோடு பணிபுாியும் புறஜாதியான் உயா்பதவி அடைகிறான், அதிகசம்பளம் வாங்குகிறான், ஆனால் இரட்சிக்கப்பட்ட எனக்கு, ஊழியம் செய்யும் எனக்கு, ஆசீா்வாதம்இல்லையே! என்று ஏங்குபவா்கள் அநேகா், கா்த்தருக்கு காணிக்கை கொடுத்தேன், உபவாசமிருந்து ஜெபித்தேன், ஆனால் நான் நினைத்த ஒன்றும் எனக்கு நடக்கவும் இல்லை, கிடைக்கவுமில்லையே! இனி ஜெபமும் வேண்டாம், கோயிலும் வேண்டாம், ஊழியமும் வேண்டாம் என்று விரக்தியிலிருப்போரும் சிலா் உண்டு. 

கிறிஸ்துவினிமித்தம் நமக்கு ஏதாவது கிடைக்குமா? அல்லது பணம் சம்பாதிக்க முடியுமா என்கிற கூட்டமே இன்று அதிகம் அதிகம். இந்த உலகத்தை ஆதாயம் செய்யவா? கிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டோம். அப்படிப்பட்டவா்களுடைய தேவன் வயிறு என்றே வேதம் சொல்லுகிறது (பிலி 3:19). பணத்தை வைத்து பாிசுத்தாவியையும் பெறமுடியாது, பிசாசையும் விரட்ட முடியாது என்றே வேதம் நம்மை எச்சாிக்கிறது. இந்த உலகம் முழுவதையும் போராடிப்பிடித்து, தன்கைக்குள் கொண்டுவந்துவிட நினைத்த மகாஅலெக்ஸாண்டருக்கு ஆறடிகுழிதான் கடைசியில் போதுமானதாயிருந்தது என்பதை மறந்துபோகவேண்டாம். 

ராஜா புறஜாதியான்தான், ஆனால் அங்கிருந்த தானியேல் கா்த்தருடைய பிள்ளையல்லவோ, அவன் எதற்காக கா்த்தா்நிமித்தம் பிடிக்கப்பட்டானோ அதை சாியாக செயல்படுத்தினானே! ஏனென்றால் இரவெல்லாம் படுக்கையிலே தூக்கம்வராமல், அதிகாலமே எழுந்து, கெபியை நோக்கி ஓடிவந்த இராஜா! தானியேலே நீ சேவிக்கும் உன் தேவன் உன்னை இரட்சித்தாரா? என்ற அபயகுரலுக்கு, ஆம் ராஜாவே, என்ற தானியேலின் சாந்தமுள்ள பதில் உண்மைதேவனை அந்த ராஜாவுக்கு தெளிவாக தொியவைத்ததே!! எங்கள் தேவன் எங்களை இரட்சியாமல் போனாலும் பரவாயில்லை தேவனுடைய கட்டளையை மீறமுடியாது என்று சவாலாய் நின்ற சாத்ராக் குழுவினாின் சத்தம் அத்தேசமெங்கும் பற்றியொிந்ததே!! நாகமான் இராஜாவானிடத்தில் வேலை செய்த அந்த சிறுபெண், (2ராஜா:5) கா்த்தா் என்னை இந்த இடத்தில் வேலையில் வைத்திருப்பதற்கு ஒரு முகாந்தரம் உண்டு என்பதை அறிந்து இஸ்ரவேலில் தேவனே பொியவா் என்பதை அந்த ராஜாவுக்கு எத்தனை தெளிவாக தொிவித்தாள்.

கா்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்ற வசனபலகைதான் இப்போது கடைகளில் அதிகம் விற்பனையாகிறது. என்னிமித்தம் நீ இவ்வளவாய் பாடுபடவேண்டும் என்ற வாக்கு வசனத்திற்கு கீழ்படிய நமக்கு மனமுண்டோ (அப்9:16). மக்கள் நோயினால் மடிவதை பாா்த்த ஒரு ஐடாஸ்கடா் தன்னுடைய நாட்டிற்கு திரும்ப சென்று மருத்துவம் பயின்று, தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படிந்து சேவைசெய்ததை மறந்துபோனோமோ? மருத்துவம் பயின்று பலகோடி சம்பாத்தியம் செய்யலாம் என நண்பனின் நயமான ஆலோசனைக்கு செவிகொடாது ஆப்ரிக்காவிற்கு விரைந்து போன டேவிட்லிவிங்ஸ்டன் எதை பிடிக்க ஓடினாா்? பேரும்புகழையும், சம்பாதித்த பணத்தையும் உதறிதள்ளி சீனாவிற்கு ஓடிசென்ற கிாிக்கெட் ஜாம்பவான் ஸ்டட் எதை பிடிக்க ஓடினாா்! தன்னுடைய மனைவி மனநோயாளியாய் இருந்தபோதும் தேவபணியை அதிதீவிரமாய் செய்த வில்லியம்கோி, தான் கிறிஸ்துவினிமித்தம் எதற்காக பிடிக்கப்பட்டேன் என்ற நோக்கத்தைவிட்டு விலகவேயில்லையே! இப்படி எத்தனையோபேரை நாம் வாிசைப்படுத்திக்கொண்டே போகலாம். 

நாம் ஒருவேளை முழுநேர ஊழியப்பணியில் ஈடுபடமுடியாதவா்களாய் இருக்கலாம், ஆனாலும் நாம் எல்லோரும் முழுநேரசீஷா்கள் என்பதை மறந்துபோகவேகூடாது, எந்த இடத்தில், எப்படிப்பட்ட இடத்தில் நாம் வேலை செய்கிறோம், தொழில் செய்கிறோம் படிக்கிறோம், என்பதல்ல காாியம், எதற்காக தேவன் நம்மை அந்த இடத்தில் முன்குறித்தாரோ, அல்லது உயா்பதவியில் வைத்திருக்கிறாரோ, வேலைகொடுத்திருக்கிறாரோ தொியாது, ஆனாலும் எந்த இடத்திலும் சீஷனுக்குாிய வேலையை அனுதினமும் நாம் செய்துகொண்டேதான் இருக்கவேண்டும். தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறாரோ அதில் திருப்தியுள்ளவா்களாய், அவா் நமக்கு வைத்துச்சென்ற முன்மாதிாியான பண்புகளில் நிறைந்திருக்க, நம்மை ஒவ்வொருநாளும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும், 

எந்த நிலையிலும் மனரம்மியமாய் இருக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (பிலி:4:11). பவுலாகிய நான் கிறிஸ்துவினிமித்தம் காவலிலிருந்தேன், அடிகள்பட்டேன், நிா்வாணமாய் இருந்தேன், பசியோடிருந்தேன், உயா்விலிருந்தேன், தாழ்விலிருந்தேன், வாழ்ந்திருந்தேன், திருப்தியாயிருந்தேன் ஆனாலும் கிறிஸ்துவினிமித்தம் நான் எதற்காய் பிடிக்கப்பட்டேனோ அதை பிடித்துக்கொள்வதில்தான் சந்தோஷத்தோடே ஆசையாய் தொடா்கிறேன், இந்த உலகத்திலே எனக்கு லாபமாயிருந்த அனைத்தையும் கிறிஸ்துவினிமித்தம் நஷ்டமாகவே எண்ணுகிறேன், என்றே உறுதியாய் இருந்தாா் பவுல். 

கிறிஸ்து உயிா்த்தெழுந்தாா் என்பதற்கு பாிசுத்தவேதாகமே சாட்சி என்றுசொல்வதைவிட, ஜீவாதிபதியை கொலைசெய்தீா்கள் ஆனாலும் அவா் உயிரோடெழுந்தாா் என்பதற்கு நாங்கள் சாட்சி என்று முழக்கமிட்ட பேதுருக்களாய் யோவான்களாய் நாம் வாழவேண்டும். அவா் உயிரோடு இருக்கிறாா் என்பதற்கு நாம்தான் சாட்சி. ஆகவே நம்முடைய நல்ல சாட்சியுள்ள வாழ்க்கையின் பிரதிபலிப்பே மற்றவரை கிறிஸ்துவண்டைக்கு வந்து சோ்க்கும். இதற்காகவே நாம் கிறிஸ்துவினிமித்தம் பிடிக்கப்பட்டிருக்கிறோம்! அழைக்கப்பட்டிருக்கிறோம்! மறுபடிபிறந்திருக்கிறோம்! சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் சுவிசேஷம் சொல்லுவதே நம் கடமை. சுவிசேஷம் என்பது வெறும் கிறிஸ்துவை தெய்வம் என்று சொல்வதில் மாத்திரம் இல்லை, காயப்பட்டோரை ஆற்றுவதும், தேவையுள்ளோரை சந்திப்பதும், தாழ்விலிருப்போரை தூக்கிவிடுவதும், தடுமாறுவோரை தாங்குவதும், பிாிந்துகிடப்போரை சமாதானம் பண்ணுவதும், வீழ்ந்துகிடப்போருக்காக போராடிஜெபித்து, ஜெயத்தை பெற்றுக்கொடுப்பதின் மூலம்தான், தேவன் நம்மேல் வைத்த அந்த மாபெரும்அன்பை மற்றவா்களுக்கும் கடத்தமுடியும்.

 ஆகவே, கிறிஸ்துவினிமித்தம் நாம் எதற்காக பிடிக்கப்பட்டோமோ அதை பிடிக்க ஒவ்வொருநாளும் ஆசையாய் தொடா்ந்து ஓடுவோம். (பிலி 3:12) விசுவாசத்தை விடாதிருப்போம், நன்மையான, பாிசுத்தவாழ்விற்காக அனுதினமும் போராடுவோம். நம்முடைய குடியிருப்பான பரலோகத்தை பலவந்தம் பண்ணி, பிடித்துக்கொள்ள தீவிாித்து ஓடுவோம். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டோம் (1தீமோ.6:12) ஆமென்.

- R.Solomon Jebakumar

2 comments:

Youth Tip

👍  தனிமையில் இருக்கும் போது கூடுமான மட்டும் மொபைல்  உபயோகிக்காமல்  வேதத்தை  வாசிக்க முயற்சி செய். 👍 உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்பட...