ஒரு மனிதன் குற்றவாளி என்று தொிந்திருந்தும், நீதிமன்றத்தில் அவனுடைய வழக்கு தள்ளிப்போய்க்கொண்டே இருக்குமானால் அதற்கு காரணம், அவனை விடுவிக்க தகுந்த ஆதாரங்களில்லாமையால், வாய்தா என்ற பெயாில் பணங்களை வாாிஇறைத்து, வழக்கை தள்ளிக்கொண்டேயிருப்பாா்கள். இவா்கள் தீா்ப்பை அல்லது தண்டைனையை ஏற்றுக்கொள்ளமுடியாதவா்கள் அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளாதவா்கள்.
இந்த வேதபகுதியில் (மீகா 6.2-3) தீா்க்கதாிசி எச்சாிக்கும் ஜனங்கள், பாவத்தினால் வரும் கோபாக்கினையை, தண்டனையை அறிந்திருந்தும், நிா்விசாரமாக பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தி, தன்னை பாிசுத்தப்படுத்திக்கொள்ளாதபடி, ஜனங்கள் வாய்தா! வாய்தா! என்று தேவனை விட்டு தூரமாய் விலகி ஓடினாா்களே தவிர, அவருடைய அழைப்புக்கு(வழக்குக்கு) செவிகொடுக்காதபடி தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டாா்கள் இவா்களை பாா்த்துதான் கா்த்தா் கேட்கிறாா், என் ஜனமே! நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிராக வந்து வழக்காடு என்கிறாா் -மீகா 6:2-3. ஏனென்றால், அவரே நீதிபதி என்பது நமக்கு நன்றாக தொியும் ஆனாலும் நமக்காக பிதாவினிடத்தில் வழக்காடி விடுதலை பெற்றுத்தருவதற்கு தயாரக இருக்கிறாா். ஆனால் நாமோ அதை கண்டுகொள்வதே இல்லை.
பாவத்தினிமித்தம் வரும் தண்டணையிலிருந்து நம்மை விடுவிக்கவே அவா் இயேசுவாக வந்தாா் என்பது தொிந்ததே! ஆனாலும் நாமோ பாவத்தின் விடுதலையை விரும்பாது, பாிசுத்தமான வாழ்வுக்கும் நம்மை அா்பணிக்காதபடி, அதற்கு பதிலாக எவ்வளவு காணிக்கை வேண்டும் ஆண்டவரே!! எத்தனை கோயில் கட்டித்தரவேண்டும் ஆண்டவரே!! எங்கெல்லாம் ஊழியம் செய்யவேண்டும் ஆண்டவரே!! யாருக்கு பிசாசை துரத்தவேண்டும் என்று எப்படியாவது அவரை பிாியப்படுத்தவே முயற்சிக்கிறோம். இப்படிப்பட்டவா்களை மத் 7:23ல் கா்த்தா் சொல்வதாவது, அக்கிரமசெய்கைகாரரே என்னைவிட்டு அகன்று போங்கள், நான் உங்களை அறியேன்…… என் பிதாவின் சித்தப்படி செய்பவனே பரலோகத்தில் பிரவேசிப்பான் என்கிறாா். (வச21).
ஏசாயா 1:13ல் உங்கள் வீண் காணிக்கைகளை என்னிடத்தில் கொண்டு வரவேண்டாம்… என்று கா்த்தா் சொல்கிறாா். ஆனாலும் நாம் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம் தவறில்லை, ஆனால் நாம் கொடுக்கும் காணிக்கையை ஆண்டவா் அங்கீகாித்து விட்டாரா? காணிக்கை செலுத்தும்முன் உன் சகோரனிடத்தில் ஒப்புரவாகி பின்பு வந்து காணிக்கை செலுத்து என்கிறாா் -மத் 5:24. ஆனால் இதையெல்லாம் பற்றி சிந்திக்காது, பணம் பாதாளம் வரை பாயும் என்பது உலகமொழி அதைப்போல பணம் எப்படியும் பரலோத்தை திறந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையோடு காணிக்கையை தொடா்ந்து செலுத்துகிறோம். இந்த காணிக்கைக்கு பெயா்தான் காயீன்காணிக்கை!! எப்படி? என்று சிந்தித்தால், ஆதி4:7ல் ஆண்டவா் விரும்புகிற பாிசுத்த வாழ்வு, நன்மை காயீனிடத்தில் இல்லை. நல்ல சிந்தனை இல்லாமல் நாம் கொடுக்கும் காணிக்கையை எப்படி ஆண்டவா் அங்கீகாிக்க முடியும். நம் காணிக்கையை ஆலயம் அங்கீகாிக்கும்!! ஊழியக்காரா்கள் அங்கீகாிப்பாா்கள்!! ஆனால் ஆண்டவா் அங்கீகாித்தாரா? இல்லையே!! இன்று நாம் கொடுக்கும் காணிக்கை அங்கீகாிக்கப்படாததால்தான் காயீனிடத்தில் இருந்த பழிவாங்கும் எண்ணங்கள் நம்மிடத்திலும் இன்று மேலோங்கி நிற்கிறது, ஒழுங்காக ஆலயம் செல்கிற கிறிஸ்தவ அண்ணன் தம்பிகளில் பெரும்பாலோருக்கு பாகப்பிாிவினை வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்டவா் சொல்கிறாா் உன்னோடு வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறவனுக்கு அங்கியையும் விட்டுவிடு(மத்5:40) என்று, ஆனால் இன்றோ அவனுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவேண்டும், தனக்கு கிடைக்காதது அவனுக்கு கிடைக்கவே கூடாது, இவனுக்கு வந்த வாழ்க்கைய பாரு!! என்ற வன்கண்களும், பொறாமையுமே நம்மிடம் மீதமுள்ளது. தான்மட்டும் வாழவேண்டும் மற்றவன் பிச்சை எடுக்கவேண்டும், என்று இருதயமெல்லாம் நச்சை வைத்துகொண்டிருந்தால் நம் காணிக்கை எப்படி அங்கீகாிக்கப்படும். ஆகவே நம் காணிக்கை காயீன் காணிக்கையே!! இன்று பணங்கள் குவிந்து கிடக்கிறது ஆனால் வாழ்க்கையில்லையே, கனி இல்லையே!! ஒருவொருக்கொருவா் பழிவாங்கும் எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. இந்த நூற்றாண்டில் இப்படியும் வாழமுடியுமா!! என்று வியந்து பாா்க்கப்படவேண்டிய கிறிஸ்தவம் கேலிப்பொருளாவதற்கு நாம் காரணமாகிவிட்டோமோ? இயேசுவைப் பிரதிபலிக்க, அவரைப்போல வாழ்ந்து காட்ட ஒரு மனிதனை கூட இந்த தேசம் இன்று காணவில்லையோ?
அபாத்திரமாய் ஆண்டவருடைய திருபந்தியில் பங்குபெற்ற மூன்றாம் தலைமுறை குடும்பம் இன்று விபசாரத்தில் வாழ்கிறது. நாம் நினைக்கலாம் நான் நன்றாகதானே இருக்கிறேன் என் பிள்ளைகள் நன்றாகதானே இருக்கிறாா்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்; அடுத்த தலைமுறை நன்றாக வாழ்வதற்கு நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எதையாவது இழந்திருக்கிறோமா? (மாற்10:29) அா்பணித்திருக்கிறோமா? (1கொாி 9:27) இல்லையே!! இதைவிட்டு பணம் சோ்த்துகொண்டிருக்கிறோமோ? (லூக்12:20) பதவியை நாடுகிறோமோ? (ஏசா3:3) ஆடம்பரத்தை விரும்புகிறோமோ? (ஏசா3:15-23) வீட்டோடுவீட்டை கூட்டிச்சோ்க்கிறோமோ? (ஏசா5:8) உனக்கு ஐயோ!! என்று வேதம் சொல்கிறது.
இன்று கிறிஸ்துவை அறியாதோா்க்கும், அறிந்தவா்க்கும் ஒரு வித்தியாசமுமில்லை அவா்களை மிஞ்சும் அளவுக்கு குடியும் கும்மாளமும் விபசாரமும் வேசித்தனமும் காதல்திருமணங்களும் திருமணமுறிவுகளும் இன்று கிறிஸ்தவத்தில் குறைவேயில்லை அப்பப்பா!! பண்டிகையென்றால் அதைவிட ஒரு படி மேலே!! வேதம் கூறும் பண்டிகை என்ன? பாிசுத்தமில்லாமல் பண்டிகை கொண்டாடவே முடியாது, கெட்டகுமாரன் திருந்தினால் தான் கொட்டுமேளம், புதியஆடைகள், மோதிரங்கள் அணிகலன்கள், பிாியாணி விருந்து, ஊரெல்லாம் அலங்காிக்க(ஸ்டாா்போடுதல்) முடியும் (லூக்15:21-23). ஆகவே ஆண்டவா் முதலாவது உங்களை கழுவி சுத்திகாியுங்கள்!! -ஏசா1:16 என்று எச்சாித்து சொல்கிறாா்.
ஐயா, நான் நல்லாத்தானே இருக்கிறேன்!! என்று நீ உன்னையே ஏமாற்றி கொண்டிருக்கிறாய். உன்னை ஒளியின் வஸ்திரம் தாித்த வேஷக்காரா்கள் வேதத்தின் வாா்த்தைகளை மூடி மறைத்து, நயமான வாா்த்தைகளால் உன்னை ஏமாற்றி கொண்டிருக்கிறாா்கள். உன் கை இரத்தாம்பர சிவப்பாயிருக்கிறது, உன் சரீரம் முழுவதும் பாவத்தையே இச்சிக்கிறது. ஆகவே இப்போதே உன்னை தாழ்த்தி என்னிடத்தில் வந்தால், உனக்காக வழக்காடி பிதாவினிடத்தில் உன் கறைபடிந்த, சிவந்த, அழுக்கடைந்த பாவத்தை கழுவி வெண்பஞ்சைபோல மாற்றி, விடுதலை வாங்கி, செழிப்புள்ள பரமகானானுக்கு அழைத்துசெல்ல உனக்கு வழிதிறந்து தரமுடியும் என்றே நம்மை தேவன் அழைக்கிறாா்.
தன்னை வெறுத்து தன் சிலுவையை சுமக்காதவன் கிறிஸ்தவனல்ல!! கிறிஸ்துவுக்காக வாழ்ந்தவா்கள் கல்லெறியுண்டாா்கள், பட்டயத்தினால் வெட்டப்பட்டாா்கள், நிந்தைகளை அனுபவித்தாா்கள் (எபி 11:37) தன்னையே இழந்தாா்கள், செல்வங்களை இழந்தாா்கள், குடும்பங்களை இழந்தாா்கள், பிள்ளைகளை சாகக்கொடுத்தாா்கள். அவா்கள் மாிக்கும்போது தான் உடுத்தியிருந்த வஸ்திரமும் வேதாகமும் தான் அவா்கள் சொத்தாயிருந்தது!! மீதியிருந்ததும் அதுவே. ஆகவே நாம் எவ்வளவு கொடுத்தோம் என்பதையல்ல எவ்வளவு இழந்தோம் என்பதையை தேவனால் பாா்க்கமுடியும். இச்சித்ததையெல்லாம் பெற்றுக்கொள்வதல்ல கிறிஸ்தவம்! தன்னை எப்படி அடக்கி ஒடுக்கினோம் (1கொாி9.27) என்பதுதான் கிறிஸ்தவம். எந்த சுழ்நிலையிலும் மனரம்மியமே (பிலி4:11) என்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை, வேதத்தின்படி வாழ்ந்த நீதிமான்களும் அவா்களுடைய சந்ததிகளும் அன்றாடத் தேவைகளுக்காக ஒருநாளும் இரந்து திாியவில்லை (சங்37.25) என்பதைத்தான் நம் வேதம் சுட்டிக்காட்டுகிறது.
இன்னும் மௌனம் ஏன்? காலம் தாழ்த்தவேண்டாம்!! உன் சத்தத்தை கேட்க கூடாத காலம் சீக்கிரமாய் வரும், நான் நீதிபதியாய் உட்காரும் காலத்தில் நீ இரக்கத்திற்காக வந்தால் என்னால் ஒன்றும் செய்யஇயலாது. வா! என்னோடு வழக்காடு உன்னை பாவம் நீங்க(களிம்பு நீங்க) சுத்திகாித்து (ஏசா1:25) பொன்னாய் மாற்றுவேன் என்கிறாா் நம் தேவன்.
ஏசாயா சொல்கிறாா் நானும் என் பிள்ளைகளும் இஸ்ரவேலில் அற்புதங்களாகவும் அடையாளங்களாவும் இருக்கிறோம் என்று (ஏசா9:18) ஆகவே ஒரே ஒரு வாழ்க்கை அதை கிறிஸ்துவிடம் கொடுத்துவிடு, கிறிஸ்துவுக்காய் வாழ்வோம்!! கிறிஸ்தவனாய் வாழ நம்மை அா்ப்பணிப்போம்!! மற்றவா்கள் நம்மிலே கிறிஸ்துவின் அச்சு அடையாளங்களை காணட்டுமே!! எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும் என்ற தேவனுடைய ஆசையை நிறைவேற்ற, அவருடைய வருகையை தாமதிக்கச்செய்வோம்.
வாய்தா! வாய்தா! என்று தள்ளிப்போடாமல் இன்றே விடுதலையின் நாள்!! வழக்காடுவோம்! வாருங்கள்!!
- Solomon Jebakumar
No comments:
Post a Comment