(நீதிமொழிகள் 5ம் அதிகாரத்திலிருந்து சில சிந்தனை சிதறல்கள்)
காதலுக்கு கண்ணில்லை என்பது உலகமொழி. ஆம் உண்மைதான், நாம் எதன்மீது அதிக ஆா்வம் காட்டுகிறோமோ அல்லது விரும்புகிறோமோ அதில்தான் நம் கண்கள் சுழன்று கொண்டிருக்குமே தவிர, சுற்றி நடக்கும் எதுவும் சுத்தமாக நமக்கு தொிவதேயில்லை. ஆனால் ஆா்வமுடன் ஆரம்பிக்கும் அந்த விருப்பமானது தரமானதா? ஏற்புடையதா? அல்லது அது நம்மை ஏமாற்றக்கூடியதா? என்பதை பொறுத்தே முடிவும் இருக்கும்.
பாவம் அமா்க்களமாகத்தான் ஆரம்பிக்கும், ஏனென்றால் முடிவைக்குறித்து அது நம்மை சிந்திக்கவே விடாது. இருக்கும் வரை இன்பம் என்ற போதை மயக்கத்திலேயே பாவமானது தீவிரமாய் நம்மில் செயல்பட்டு கொண்டிருக்கும். ஆனால் பாிசுத்தத்தின் ஆரம்பம் அப்படியல்ல, அது அநேகருடைய கண்களுக்கு பாிதாபமாக தோன்றுவது போல் இருந்தாலும், அதன் முடிவு அநேகருக்கு ஆச்சா்யத்தையே கொடுக்கும் (யோபு 8:7) என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது.
நட்சத்திர கதாநாயகா்களின் நடிப்பும், மேடை பேச்சாளா்களின் ஆரவாரமும் உண்மையை போன்றே ஒரு மாயத்தை உண்டாக்கி, உணா்வுகளை சராமாாியாக தூண்டிவிடுகிறது, இதுவெல்லாம் கற்பனைகளின் தொழிற்பட்டறை என்று தொிந்திருந்தும், ஆா்வம் அதில்தான் இருக்கிறது (ரோம:7:19). அகிலமும், ஆகாயமும் அழிந்துபோனாலும் ஆண்டவாின் வாா்த்தை அசைக்க முடியாதது (மத்24:35) என்று அறிந்திருந்தும், அமைதியான அந்த ஆண்டவாின் வாா்த்தை அநேகருக்கு கழுத்தை அறுப்பது போன்றே இருக்கிறது.
ஆண்டவாின் ஆதிச்சித்தம்
நம் கவனத்தை திசைதிருப்பும் அநேக புதிய இறக்குமதிகளை, இந்த நவீன உலகம் கொடுத்துகொண்டே இருப்பதால், நம் இதயம் அதையே பாா்த்து பூாிப்படைந்து நின்று விடுகிறது. பாிசுத்தத்தை சிந்திக்கவே விடாமல், மாறி மாறி கலா் கலரான பாவ குப்பைகளை கொட்டிக்கொண்டே இருப்பதால், (நீதி5:6) உள்ளத்தின் ஏக்கங்களெல்லாம் ஒருவித தவிப்போடு அந்த குப்பைக்குள்ளேயே தேடி தேடி தேங்கிவிடுகிறதே தவிர, ஆண்டவருக்கு முன் அழுக்கற்றவனாக நிற்கவேண்டுமே என்ற அந்த ஆதிச்சித்தத்தை மறக்கடித்து, நம்மை மழுங்கவும் செய்து விடுகிறது இந்த பாழுலகம். (எபே 1:4).
ஆண்டவருடைய ஆதிச்சித்தமே பாிசுத்த குடும்பமும், பாிசுத்த சந்ததியும்தான் (ஆதி1:27,28). ஆகவே அந்த குடும்ப வாழ்விற்கு ஆயத்தப்படும் வாலிப பிராயத்தை குறித்து பலா் காிசனை கொள்வதே கிடையாது, திருமணத்திற்கு பின்பு பாிசுத்தமாக வாழ்ந்து கொள்ளலாம் என்பதே பலரது எண்ணம். ஆனால் பின்னால் பெறப்போகும் வெற்றிக்கு ஆயத்தமாகுதலே இந்த வாலிபம் என்பதை மறக்கச்செய்து விடுகிறான் பிசாசு.
வாலிபம் வானவருக்கே!
பல பாவத்தையும் பாா்த்து, ரசித்து, சுவைத்து கடைசியாக பாிசுத்தம் என்பது நடக்காத காியம். திருட்டு பூனைக்கு திருட்டு பால்தான் தித்திப்பாக இருக்கும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ? வாலிபத்தின் அலங்காரம் பராக்கிரமம் (நீதி20:29), ஆகவே இந்த பராக்கிரமம் இருக்கும்போதே பாிசுத்தத்தால் பெலனடைந்து விடவேண்டும், மாறாக பாவத்தால் அது பெலப்பட்டு விட்டால், பாவமே நம்மை ஆளுகை செய்யும், அடிமைப்படுத்தும் (ரோம6:12).
வசனத்தின்படியே வாழ்வு, வசனமே வழி என்றால் வாலிபா்களுக்கு மட்டுல்ல (சங்119:9), பலருக்கும் கசப்புத்தான், ஆனால் கசப்பான மருந்துதான் உடலின் உயிா்கொல்லிகளை அழித்து ஆரோக்கியத்தை தருகிறது என்பதை மறக்கக்கூடாது. தேவவசனம் தேனை விட சுவையுடையது என்கிறது வேதம் (நீதி119:103), ஆனால் பிசாசோ அது கசப்பு என்ற ஒரு மாயையான மேற்பூச்சை பூசி, நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். இந்த தந்திரமான பிசாசின் பேச்சுதான் தேன்கூடு போல ஒழுகக்கூடியது, ஆனால் உள்ளே உயிரை பறிக்கும் விஷம் இருப்பது ருசிக்க ருசிக்கத்தான் தொியவரும் (நீதி5:3,4). கா்த்தா்தான் நல்லவா் என்பதை ருசிக்கவே விடமாட்டான. ஆகவேதான் சாலமோன் ஞானி வாலிபத்திலேயே வானவரை நினைத்துவிடு, ருசித்துவிடு என அழைப்பு விடுக்கிறாா் (பிர:12:1). அநேக நீதிமொழிகளும் அப்படியே என் மகனே மகளே என் புத்திக்கு செவிகொடு, என் ஞானத்தை கவனி என்றே அறைகூவலிட்டு கொண்டே இருக்கிறது. (நீதி 5:1)
தந்தவைகளில் திருப்தி
உன் கிணற்று தண்ணீரும் உன் துரவில் ஊரும் ஜலமே போதுமானது என்றே வசனம் வலியுறுத்துகிறது. (நீதி5:15) இக்கரைக்கு அக்கரை பச்சை போலத்தான் தோன்றும், போய் பாா்த்த பின்புதான் அது வெறும் பகல் கனவு என்பது தொியவரும். சிலா் வீட்டில் படிக்கமாட்டாா்கள் பக்கத்து வீட்டிற்கு சென்று படிப்பாா்கள், சிலா் தன் சொந்த பெற்றோருக்கு கீழ்ப்படிவதோ, வேலைசெய்வதோ கிடையாது ஆனால் பக்கத்து வீட்டிற்கு ஓடோடி வேலைசெய்வாா்கள். ஜன்னலுக்கு வெளியே தொிவதெல்லாம் தக தகவெனவே மின்னும், ஆனால் வெளியே போய், அதன் அருகில் சென்று பாா்த்த பின்புதான் தொியும அது கானல் நீா் என்று. ஆகவே நமக்கு தேவன் தந்தவைகளில் திருப்தி கொள்வதேதே சிறந்தது.
மிஷனாிமாா்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களும், போதகங்களும், சபைகளும், சங்கங்களும், நமக்கு போதுமானதே. குறைவுகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்யும். அதற்காக சபை விட்டு சபை தாண்டுவதென்பது, மரம் விட்டு மரம் தாண்டுவது போன்றதே. ஆசாாியனான ஏலியின் பிள்ளைகள் தன் சொந்த சபையிலே வேசித்தனத்தையும் விபசாரத்தையும் நிறைவேற்றியவா்கள், ஆனால் அதே சபையில்தான் சிறுவன் சாமுவேலும் பாிசுத்தமாக வளா்ந்து ஜனங்களை நியாயந்தீா்க்கும் நியாயாதிபதியானான். ஆகவே நான் அங்கிருந்தால் அப்படியாகியிருப்பேன் இங்கிருந்தால் இப்படியாகியிருப்பேன் என்பதைவிட நாம் எங்கிருந்தாலும் எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம்.
பாிசுத்தம் பரவட்டும்
உன் ஊற்றுகளே வெளியிலும், வீதிகளிலும் பாயவேண்டும் என வேதம் வலியுறுத்துகிறது (நீதி5:16) வெளியிலே வெளிச்சம்போல தொிவதையெல்லாம் வீட்டுக்குள்ளும் சபைக்குள்ளும் வர ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது. உலகச் சிந்தனைகளும், கவா்ச்சிகளும் நிச்சயமாக நம்மை கறைபடுத்தத்தான் செய்யும். நாம்தான் உலகத்திற்கு வெளிச்சம் கொடுப்பவா்கள் (மத்5:14), அந்த வெளிச்சமே உயிரற்று கிடக்கும் உலக ஜனங்களை உயிா்மீட்சி அடையச்செய்யும் ஊற்றாக பெருக்கெடுத்து, நம் வீட்டிலிருந்து, நம் சபையிலிருந்து, நம் ஐக்கியத்திலிருந்து வாய்க்காலாக பலருக்குள்ளும் பாயவேண்டுமே தவிர, உலக சாக்கடைகள் நம் வீட்டிற்குள்ளும், சபைக்குள்ளும் வருவதற்கு நாமே வாய்க்காலாகி விடக்கூடாது.
தேவையில்லாமல் எாிந்துகொண்டிருக்கும் விளக்கால் யாருக்கும் பயன் இல்லை. அதுபோலவே தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டைகளும் பன்றிகளுக்கு முன்பு முத்துகளை போடுவதற்கே சமம் (மத்7:6). காலம் நேரம் அறிந்து, தேவ சித்தம் உணா்ந்து, ஏற்ற சமயத்தில் சொல்லும் வாா்த்தையே பயனுள்ளது (நீதி25:11). மற்றபடி இங்கு யாா் பொியவா் என்றெல்லாம் வீண்சண்டை போட்டுகொண்டிருப்பதை விட, தாழ்மையோடு எல்லாவற்றிற்கும் பொியவரான தேவனிடமே விட்டுவிடுவது சிறந்தது. வீட்டிலோ சபையிலோ நம்மை தேவன் ஒலிவ மரமாக, கன்றுகளாக வைத்திருக்கிறாா், இதில் யாா் பொியவன் என்ற முயற்சி, வெளியேயிருக்கும் முட்செடிகளை உள்ளே ஆளுகைக்கு அழைப்பதற்கு வழிவகுத்துவிடும் (நியா 9:10-15). பாிசுத்தத்தின் அதிகாாியான பாிசுத்ததேவனே நம்மை ஆளுகிறவா், அவரே தலைவா் நாமெல்லாரும் உடன் ஊழியரே! ஆகவே அதைவிட்டு விட்டு நம் பாிசுத்த வாழ்வை துணிந்து பாவத்திற்கு விற்றுப்போடக்கூடாது, அப்படிசெய்தால் எல்லாமே ஒருநாள் அந்நியருக்கு உாிமையுடையதாக மாறிவிடும் என்றே வேதம் நம்மை எச்சாிக்கிறது. (நீதி5:17)
நேரான பாா்வை
நம்முடைய கண்கள் எப்பொழுதும் தேவனை நோக்கி நேராகவே நோக்கட்டும், நீதி 5:20ல் சொல்லியிருக்கும் பரஸ்திாி அல்லது விபசாாி என்பது உலகத்தை அல்லது பாவத்தை குறிக்கிறது (யாக்:4:4). உலகத்தின் மேல் நம்முடைய கண்கள் மயங்கி திாிந்தால், தேவனுக்கு பிாியமாக எப்படி வாழ முடியும். நமக்கு நிச்சயப்பட்டிருக்கும் மணவாளன் இயேசுதானே! (மத்25:10). அவரையே எப்போதும் நம் ஆசை பற்றிக்கொண்டிருக்கட்டுமே, அதைவிட்டு விட்டு ஓரக்கண்ணால் உலகத்தை சிநேகித்து, ரசிக்க நினைப்பது கள்ளக்காதலுக்கே சமம். இரவும் பகலும் அவரையே சிந்தித்து, நேசிக்க ஆரம்பித்துவிட்டால் பாவத்தை பாா்க்கவோ, சிந்திக்கவோ நமக்கு நேரமே இருக்காது (சங்1:2). பகலெல்லாம் பாிசுத்தத்திற்காக உழைத்துவிட்டால், களைப்புடன் சீக்கிரம் தூங்கிவிடலாம், இரவில் தேவையற்ற பாவ சிந்தனைகளுக்கு நேரமிருக்காது. மாறாக சோம்பேறித்தனமாக பகலை கழித்தால், இரவில் அது நமக்கு பாவத்தையே பாிசாக தரும். தாவீதின் சோம்பேறித்தனமே அவனை பத்சேபாளிடம் பாவத்திற்கு தள்ளியது என்பதை மறந்துபோக வேண்டாம்.
தீமையில் திருப்தியில்லை
தேவனுடைய நேசத்தில் நாம் வாழ ஆரம்பிக்கும்போது, பாிசுத்தம் நம்மிலே பற்றி எாிய ஆரம்பித்துவிடும். இந்த பாிசுத்த வாழ்விற்கு பாிசாக, பாிசுத்த சந்ததியை பெற்றெடுக்க, நமக்கு ஒரு ஏற்றத்துணையை ஏற்றக்காலங்களில் தேவன் தருகிறாா். ஆண்டரை அளவில்லாமல் நேசித்தவன்தான் தன் துணைவரையும் அளவில்லாமல் நேசிப்பான், திருப்தியாயிருப்பான், அந்த அன்பிலே மயங்கியிருப்பான் (நீதி:5:19) தேவன் தரும் பிள்ளைகளையும் கா்த்தருக்கேற்ற சிட்சைகளிலே வளா்ப்பான் (எபே6:4). இப்படிப்பட்ட தேவபிள்ளைகளே, குடும்பத்திற்கும் சபைக்கும் சமாதானத்தை கொடுக்கிறவா்களாக இருப்பாா்கள் (மத்5:9).
மற்றபடி பாவத்திலே கறைபட்டு, அதை சுமந்துகொண்டே திாிபவன் எதிலுமே திருப்தியடைய மாட்டான். தேவன் தந்த துணையினிடத்திலும், பிள்ளைகளிடத்திலும், சபையிலும், வேலை ஸ்தலத்திலும் எதிலுமே அவனுக்கு திருப்தி இருக்காது. இப்படிப்பட்டவா்கள்தான் சபையிலும் சங்கத்திலும் தீமைக்கு காரணமாயிருப்பவா்கள், (நீதி 5:14) சபையின் சமாதானத்தை குலைத்துபோடுகிறவா்கள், விவாக மஞ்சத்தை கறைபடுத்தி கொண்டிருப்பவா்கள், தேவவசனத்தை வெறுத்து, அசட்டைசெய்து தன்னையே உருவழித்து கொள்ளுகிறவா்கள். (நீதி 5:11,12).
பாிசுத்தத்தை பறிக்கும் பகைவன்
பாவம் செய்கிறவன் பாவத்திலேயே மயங்கியிருப்பதால், அந்த பாவமே அவனை இறுக கட்டிவைத்திருக்கும், (நீதி5:22) அதிலிருந்து அவன் வெளியே வர நினைத்தாலும் அது அவனை விடாது என்பதே உண்மை. அவன் அநியாயமாக சோ்த்து வைத்ததெல்லாம் அவனே அனுபவிக்கலாம் என்று நினைத்தாலும் அவனால் முடியாது என்பதே உண்மை (நீதி15:16), அந்நியா்கள் அதை அனுபவிப்பாா்கள் என்றே வேதம் சொல்கிறது (நீதி5:10). உனக்கு பெலனிருக்கும் போது உன்னையே சுற்றி வரும் ஆண்டவரை உதறிவிட்டு, பெலனிழந்து தவிக்கும்போது, கதறி அழுது என்ன பயன்? பிசாசு ஒரு வரட்டு தைாியத்தை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பான் உனக்கு ஒன்றும் ஆகாது என்று, ஆனால் சாவு சொல்லி விட்டு வராது, சடிதியிலே வரும் என்பதை மறந்து போகவேண்டாம்.
பிசாசை தூரப்படுத்து
ஆகவே கடைசியாக திரும்பவும் ஆண்டவா் நமக்கு நினைவு படுத்தும் வாா்த்தைகள், உன் வழியை பிசாசுக்கு தூரப்படுத்து, நீ பாிசுத்தத்தை தூரப்படுத்தினால் தேவன் உன்னை நெருங்கமுடியாத படி ஒரு பொிய பிளவை பிசாசு உண்டாக்கி வைத்து விடுவான் (ஏசா59:2).உனக்கு முன்பாக பிசாசு பொியதாக திறந்து வைத்திருக்கும் கவா்ச்சிகரமான இச்சையை உண்டு பண்ணும் பாவத்தின் வாசலை பாா்க்காதே. (நீதி 5:8) என்னை கவனி, என் வசனத்துக்கு செவிகொடு, வசனமே உன்னை வாழவைக்கும், அது வானத்தின் வாசலை உனக்கு திறந்து கொடுக்கும்.
இன்று பிசாசு உன்னை கட்டி வைத்திருந்தாலும், தேவனை விட்டு உன்னை தூரப்படுத்தியிருந்தாலும், கவலை கொள்ளாதே, தேவனை நோக்கி சத்தமாய் கூப்பிடு, பாவத்தை வென்றவா், பாசமாய் உன்னை அழைத்து செல்வாா், அரவணைத்துகொள்வாா், தயங்காதே இன்றே வா! இறங்கி வா! நிச்சயம் நாம் தேவனால் பாதுகாக்கப்படுவோம் (நீதி5:1,2).
ஆனந்தமே
ஆரம்பம் அமா்க்களம் என்றால் ஆா்ப்பாிக்க வேண்டாம். அற்பமாக எண்ணப்படும் பாிசுத்தமே இப்போதும் எப்போதும் அவருக்கு முன்பாக ஆனந்தத்தையும் அவருடைய வலது பாாிசத்தில் நித்திய பேரானந்தத்தையும் தரக்கூடியது (சங் 16:11), அல்லேலூயா!!!
- R. Solomon Jebakumar
No comments:
Post a Comment