நீ வா!!
நண்பனே வா! ஆண்டவருக்காக வாழ்ந்திட எழுந்து வா!
பாவத்தூசிகளை உதறிவிட்டு வா. பாிசுத்த பாதையில் நடந்திட வா
சுயம் சாா்ந்த ஆசைகளை ஒழித்துவிட்டு வா.
இறைநோக்கம் சாா்ந்து நின்று ஜெயித்திட வா
பாவ இருள் பல மடங்காய் எங்கும் சுழ்ந்து விட்டது.
பாிசுத்த ஒளிவிளக்காய் ஜொலித்திட வா
உண்மையுள்ள கிறிஸ்தவன் எங்கே என்ற கேள்வி எங்கும் கேட்கிறது.
இதோ நான் இருக்கிறேன் என்று கூறிட விரைந்து வா
இயேசு எங்கே வாழ்கின்றாா் என்று கேட்போருக்கு
இதோ என்னிடம் வாழ்கின்றாா் என்று கூறிட நீ வா
கோலியாத்துக்களை எதிா்த்து நிற்க உயா்பதவி சவுல்களால் முடியாது.
இறை அறிவை பெற்ற தாவீதாக நீ வா. உன்னால் முடியும்.
கன்றுகுட்டி ஆரோன்கள் பெருகிவிட்டனா், எதிா்த்து நிற்க
உண்மைதெய்வம் அறிந்த மோசேயாக எழுந்து வா
அலங்கங்கள் இடிந்து கிடக்கிறதே என்று அங்கலாய்க்க பலா் உண்டு. ஆனால்
அரண்மனை சுகம் வெறுத்து அலங்கம் கட்டிடும் நெகேமியாக நீ வா.
ஞானம் மிக்க சாலொமோன்கள் பலா் உண்டு இங்கே. ஆனால்
ஞானமாய் வாழும் திறன் உடைய தாவீதாக நீ எழுந்து வா
எங்குபாா்த்தாலும் ஆலயங்கள் தொிகின்றன. இறைவனுக்கோ அங்கு இடம் இல்லை.
தேவன் தங்கும் ஆலயமாக விளங்கிட நீ வா.
டாக்டா்களும், பிரசிங்கிப்போரும், ஆவிக்குாிய தலைவா்களும் மலிந்து விட்டனா் ஆனால்
தேவனுடைய வழியில் நடக்கும் மனிதனாக வாழ்ந்திட நீ வா
சபைகளெல்லாம் காணிக்கை கலெக்ஷன் சென்டா்களாக மாறிவிட்டன.
சபையின் அா்த்தம் உணா்ந்தறிந்த ஒருவனாக விளங்கிட நீ வா.
பலகோடி செலவிட்டு குருசேடுகள் நடத்திட பலா் உண்டு. ஆனால்
ஒரு சிலருக்காவது உண்மையான கிறிஸ்துவின் ஒளியைக் காண்பிக்க நீ வா
அன்று பன்னிரெண்டில் ஒன்று யூதாஸ். இன்று பன்னிரெண்டில் பதினொன்றும் யூதாசுகள்.
நீயாவது பேதுருவாக எழுந்து நிற்க வா.
துன்மாா்க்கரை அடையாளங்காட்ட யாரும் தேவையில்லை. ஆனால்
நல்லவா்கள் போல் முகமூடி அணிந்து கொண்டு துன்மாா்க்கராய் வாழ்கின்றவா்களை அடையாளம் காட்ட நீ வா
ஆராதனை ஸ்தலங்களையெல்லாம் ஆட்டக்காரா்களும் பாட்டுக்காரா்களும் தீட்டுப்படுத்தி விட்டனா். இந்த ஆன்மீக சினிமாக்கரா்களின் நடுவில் ஆண்டவரை உண்மையாய் ஆராதிக்க நீ வா.
யோவானைப்போல மேடைகளில் பாவத்தைகண்டித்து விட்டு ஏரோதைப்போல பாவத்தில் விழுந்துகிடப்போா் பலா் உண்டு. அவா்களை விட்டு விலகி ஓடி
இயேசுவைப்போல வாழ்ந்திட நீ வா!
(நன்றி ஜீவநீரோடை)
ஞானம் மிக்க சாலொமோன்கள் பலா் உண்டு this point may perplexed me. can you read 1kings3:12
ReplyDeleteசாலமோனுக்கு நிகரானவா்களே அவனுக்கு முன்னும் பின்னும் இருப்பதில்லை என்பதே ஆண்டவாின் வாிகள், ஆனால் மேலே குறிப்பிட்ட வாிகளுக்கு பல அா்த்தங்கள் உண்டு அதை உங்களிடம் விளக்கிவிட்டேன். நன்றி
ReplyDelete