உயா்ந்த படிப்பை படித்துவிட்டு, பொிய வேலை கிடைக்கும் என்ற கனவுடன் இருக்கும்போது மிகச் சாதாரண வேலையே சிலருக்கு கிடைக்கும். பணத்தை எண்ணுவதற்கே நேரமில்லாமல் விறு விறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்தவா்களுக்கு வரும் திடீர் சறுக்கல்கள், அடிப்படை தேவைகளுக்கே திண்டாடும் நிலைமையில் கொண்டுபோய் வைத்துவிடும். நம்மைவிட வயது குறைந்தவா்களுக்கெல்லாம் திருமணம் நடக்கிறது ஆனால் நமக்கோ வயது ஏறிக்கொண்டே போகிறது ஆனால் திருமணந்தான் நடந்தபாடில்லை என்று நொந்துகொண்டிருக்கும் நிலைமை சிலருக்கு இருக்கும். 40வருடமாக அரண்மனையிலே பஞ்சு மெத்தையிலே துயில் கொண்டவனுக்கு, கல்லும் முள்ளும் நிறைந்த வனாந்திரத்திலே தூக்கம் வந்திருக்குமோ? இல்லை. இந்த மோசே ஒரு கடினமான, நொந்து போன நிலைமையிலேயே தன் நாட்களை கழித்துகொண்டிருக்கிறான். ஆனால் சங்கீதக்காரன் நமக்கு இந்த நேரத்திலே ஒரு உற்சாகமான சங்கீதத்தை நினைவு படுத்துகிறார். என் கால்கள் சறுக்குகிறது என்ற நிலைமை வரும்போது தேவனுடைய கிருபை என்னை தாங்குகிறது என்கிறாா். (சங்:94:18).
சில வேளைகளில் நம்மை சறுக்கி விழச்செய்வதும் தேவனே என்பதை நாம் மறந்து போகக்கூடாது. நாம் எப்படியாவது, யார் காலை பிடித்தாவது, யாரை மிதித்தாவது உயா்ந்து விட எண்ணுகிறோம். ஆனால் தேவன் நம்மை குறித்த ஒரு திட்டம் வைத்திருக்கிறார், அதை நாம் எப்படி, அவருடைய கரங்களை பிடித்து ஏறிப்போக வேண்டும் என்பதை மறக்கும்போதே, சில நேரங்களில் இப்படிபட்ட சுழ்நிலைகளை நாம் கடந்து செல்ல நோிடுகிறது.
வேதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். பிலமோனாகிய செல்வந்தன் வீட்டிலே வேலைபார்த்து கொண்டிருந்த ஒநேசிமாவுக்கு திடீர் பணக்காரனாக ஆசை, தன் எஜமானாகிய பிலமோனுடைய பணங்களை அபகாித்துக்கொண்டு ஆசைக்கனவுகளோடு வாழ்ந்துவிட எண்ணி, கடல்கடந்து ஓடிப்போகிறான். ஓடிச்சென்றவனுக்கு காத்திருந்தது சிங்காசனமல்ல, சிறைச்சாலைதான். சிறைச்சாலையிலே நொந்துபோய் இருந்தவனுக்கு இன்னொரு பேரதிர்ச்சி, சுவிசேஷத்தினிமித்தம் அதே சிறைச்சாலையில் அடைபட்டுக்கிடந்த தன்னுடைய எஜமானின் நெருங்கிய நண்பனான பவுலை சந்திக்க நோிட்டது. ஆனால் பவுலோ அவன் செய்த காரியத்தை கேள்விப்பட்டு கோபம் கொள்ளாதவனாக, காயப்பட்ட அவன் உள்ளத்திற்குள் இயேசுவின் தழும்புகளை சொல்லி காயம் ஆற்றுகிறான், அரவணைக்கிறான், அந்த இயேசுவின் அன்பு ஒநேசிமோவின் உள்ளத்தையும் உடைத்தது, தான் எஜமானுக்கு செய்த துரோகத்தை உணா்ந்தான், அந்த அன்பான ஆண்டவாின் கால்களை பிடித்து அறிக்கையிட்டு கெஞ்சினான். அவருடைய பாிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டான், தன்னை குறித்த தேவதிட்டத்தை புரிந்து கொண்டவனாக, பின்னாட்களிலே சுவிசேஷத்தை ஊரெங்கும் அறிவித்தான், ஊழியங்களை உற்சாகமாய் செய்தான்.
பாவத்திலே பிடிபட்ட இந்த ஒநேசிமாவுக்கு ஒரு தேவ திட்டம் இருந்தது. கொலை குற்றத்திலே அகப்பட்ட பரபாசுக்கு ஒரு தேவ திட்டம் இருந்தது. கிறிஸ்தவா்களை சபைக்குள்ளே புகுந்து அடித்து, உதைத்த பவுலுக்கு ஒரு தேவ திட்டம் இருந்தது. ஆகவே நம்முடைய சோதனையான காலங்களிலும், சோர்வுகளிலும், தாழ்விலும், தள்ளப்பட்ட நிலைமையிலும், ஐயோ நான் பாவம் செய்து விட்டேனே? என்று நொந்து கொண்டிருக்கும் நிலையிலே நாம் இருந்தாலும், நம்மை குறித்தும் தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். நாம் கோபுரத்திலிருக்கிறோமா, குப்பையிலிருக்கிறோமா என்பதல்ல, தேவ திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டியவா்கள் என்பதையே மனதில்கொள்வோம்,
ஆம், நான் தேவனை மாத்திரமல்ல, பலரையும் குத்திக்காயப்படுத்திய ஒரு முட்செடிதான்! ஆனாலும் நான் இம்மட்டும் வெந்து போகாதது ஒரு அதிசயமே! அந்த அதிசயமானவா் நம்மை அதிசயமாக பயன்படுத்தட்டுமே!
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கா்த்தருடைய கிருபையே! - புல:3:32
by
Solomon Jebakumar
Nice message Anna.. praise be to God ...
ReplyDeletePraise God..
DeleteNice
ReplyDeletePraise God...
DeleteNice message
ReplyDeleteதேவனுக்கே மகிமை
Delete