Thursday, 30 November 2023

Youth Tip



👍 தனிமையில் இருக்கும் போது கூடுமான மட்டும் மொபைல் உபயோகிக்காமல் வேதத்தை  வாசிக்க முயற்சி செய்.

👍உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிற எந்த உறவும் வேண்டாம் ....

👍 Mobile, Internet, Facebook ,Whatsapp ,Twitter இவைகள்
உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை...

👍 யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்.

👍 உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் தேவனை அறியாதவர்களுக்கும், ஆவிக்குரிய ஆரம்பத்தில் இருப்பவர்க்கும், இன்னும் மற்றவர்களுக்கும் முன்மாதிரி.

👍 மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. உனக்குள் தேவன் வைத்திருக்கும் திறமையே விலையேறப்பெற்றது.

👍 தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும். உன் வஸ்திரம் மற்றவர்களின் சிந்தையை மாற்ற கூடியதாக இருக்க கூடாது..

👍 உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும். நீ விட்டு வந்த பாவத்தை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.

👍 இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம், பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமும், கிருபை மேல் கிருபையும் மென .....

👍 Beach, Park, Shopping Mall இந்த இடங்களுக்கு கூடுமானமட்டும் குடும்பமாக போக பழகுங்கள்.. உலகத்தின் கவர்ச்சி உன் வாலிபத்தை கறைப்படுத்தப்பார்க்கும்.

👍 உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்லலாம் தவறில்லை. ஆனால் அவரின் சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.. அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.

👍 உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே,
வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயிக்கலாம்.

👍 உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே ... பரலோகம் பாராட்டுகிறது

👍 மொத்தத்தில் நீ உலகத்திற்கு உரியவன்(ள்) அல்ல... பரலோகத்திற்கு உரியவன்(ள்)

ஆமென்.. 

(படித்ததில் பிடித்தது)

- R.Solomon Jebakumar
  Bible Arrows

Youth Tip

👍  தனிமையில் இருக்கும் போது கூடுமான மட்டும் மொபைல்  உபயோகிக்காமல்  வேதத்தை  வாசிக்க முயற்சி செய். 👍 உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்பட...